சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்

Google Oneindia Tamil News

சென்னை: என் தந்தையின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டபோதிலும் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.

Recommended Video

    Perarivalan கைது செய்யப்பட்டது முதல் விடுதலை வரை.. கடந்து வந்த பாதை | Oneindia Tamil

    "என் தந்தை கொலை வழக்கில் எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபமோ வன்மமோ கிடையாது. அப்பாவை இழந்தது கடினமானது. இதயம் பிளந்ததை போன்று நான் உணர்ந்தேன். அந்த வேதனை எல்லோருக்கும் தெரியும். அதற்கு காரணமானவர்களை நான் மன்னித்துவிட்டேன்."

    கடந்த 2019 ஆம் ஆண்டு புதுச்சேரியில் மாணவி ஒருவர் தன்னிடம் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதில் இது. பெருந்தன்மையோடு அவர் இவ்வாறு தெரிவித்தபோதிலும், தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் எழுவர் விடுதலை விவகாரத்தில் எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றனர்.

    பேரறிவாளன் விடுதலை மட்டும் போதாது... ஆளுநர் பதவி விலகனும் - புதிதாக ட்விஸ்ட் வைக்கும் தியாகு பேரறிவாளன் விடுதலை மட்டும் போதாது... ஆளுநர் பதவி விலகனும் - புதிதாக ட்விஸ்ட் வைக்கும் தியாகு

    பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளன் விடுதலை


    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது.

    காங்கிரஸ் கருத்து

    காங்கிரஸ் கருத்து

    இதுகுறித்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், "பேரறிவாளன் விடுதலையை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், நிரபராதி இல்லை என்பதையும் அழுத்தமாக கூற விரும்புகிறோம். பேரறிவாளன் விடுதலையை கண்டித்து நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் " என அறிவித்துள்ளார்.

    ஜோதிமணி

    ஜோதிமணி

    இவர்கள்தான் இப்படி கருத்து தெரிவித்துள்ளார்கள், மற்ற காங்கிரஸ் பிரமுகர்களின் நிலைபாடு என்ன என்று ட்விட்டரில் தேடினோம். அப்போது காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் கருத்தை வரவேற்கும் வகையில் அக்கட்சியின் எம்.பிக்கள் ஜோதிமணி மற்றும் கார்த்தி சிதம்பரம் அவரது அறிக்கையை எந்த கருத்தும் இன்றி பதிவிட்டு உள்ளனர்.

    கார்த்தி சிதம்பரம்

    கார்த்தி சிதம்பரம்

    சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், சற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "தமிழ் தமிழ் என பேசும் எந்த தலைவர்களும் முன்னாள் பாரத பிரதமர் திரு. ராஜிவ்காந்தி அவர்களுடன் இறந்த தமிழர்களைப் பற்றியும்,மற்றவர்களை பற்றியும் பேசுவது இல்லையே ஏன்? கொலை குற்றவாளிகளை ஹீரோக்கள் ஆக்காதீர்கள்." எனக் குறிப்பிட்டு தனது தொலைக்காட்சி நேர்காணல் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

     திருநாவுக்கரசர் கருத்து

    திருநாவுக்கரசர் கருத்து

    இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது "சட்டப்படி உரிமைபெறும் உரிமை அனைவருக்கும் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் காங்கிரசுக்கு மாற்றுக் கருத்து கிடையாது." எனக் கூறி இருக்கிறார். சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்." என்றார்.

    அமெரிக்கை நாராயணன்

    அமெரிக்கை நாராயணன்

    மாநில காங்கிரஸ் தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அக்கட்சியினர் மூத்த உறுப்பினரான அமெரிக்கை நாராயணன் மிக காட்டமாக இந்த தீர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து உள்ளார். "சட்டம் என்ற கழுதையின் சந்து பொந்துகளில் புகுந்து வந்த பணநாயகத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் கிடைத்த வெற்றி." என காட்டமாக விமர்சித்து உள்ளார்.

    திருச்சி வேலுசாமி

    திருச்சி வேலுசாமி

    மற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் இதுகுறித்து ஒருமித்த நிலைபாட்டில் இருந்தாலும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் பேச்சாளருமான திருச்சி வேலுசாமி ஏழு தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளார். ராஜீவ் கொலையின் பின்னணியில் உள்ள அரசியல் சதிகள் குறித்து விரிவான புத்தகத்தையே அவர் எழுதியுள்ளார். ஏழு தமிழர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளுக்காக முதல் குரலை எழுப்புவேன்." என்று அப்போதே தெரிவித்தவர் திருச்சி வேலுச்சாமி.

     குழப்பும் காங்கிரஸ் நிலைப்பாடு

    குழப்பும் காங்கிரஸ் நிலைப்பாடு

    கொல்லப்பட்ட ராஜிவ் காந்தியின் மகனும் மூத்த தலைவருமான ராகுல் காந்தியே கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக கூறிவிட்ட நிலையிலும் கூட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டத்தை அறிவித்து இருப்பது கூட்டணி கட்சிகளுக்கு மத்தியிலும் எழுவர் விடுதலையை உணர்வாக கருதும் தமிழ் மக்கள் மத்தியிலும் அதிருப்தியையே அக்கட்சிக்கு ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    English summary
    Even Rahul Gandhi forgived Rajiv's murderes - But Congress Tamilnadu members announced protest to condemning Perarivalan release: என் தந்தையின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டபோதிலும் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X