தீபா கூடத்தான் எங்களை நீக்கிவிட்டதாக சொல்றாங்க.. அதுக்காக.. திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல்!
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூடத்தான் தங்களை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக சொல்கிறார்கள் என்றும் அதற்காக நீக்கப்பட்டதாக அர்த்தம் ஆகிவிடுமா எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வினவியுள்ளார்.
தீபாவை போல் இன்னும் யார் வேண்டுமானாலும் தங்களை நீக்கிவிட்டதாக அறிவித்துவிட்டு போகட்டும் என ஓ.பன்னீர்செல்வத்தை மனதில் வைத்து சூசகமாக சாடினார்.
அவர்கள் நடத்தும் நாடகம் இன்னும் எத்தனை நாட்களுக்கு என பார்ப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பற்றி அவர் விமர்சித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசுகிறார் என்றால் கண்டெண்ட்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்தளவுக்கு கண்டெண்ட்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் அவர். வாய் தவறி பேசுகிறாரோ அல்லது விளையாட்டாக பேசுகிறாரோ தெரியாது, நக்கல் -நையாண்டி -கேலி -கிண்டலுடன் பேசக்கூடியவர் திண்டுக்கல் சீனிவாசன்.

ஓபிஎஸ் அராஜகம்
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எம்.ஜி.ஆர்.மாளிகையான அதிமுக தலைமைக்கழகம் மீது தாக்குதல் நடத்தி அராஜகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அதிமுக பொருளாளர் விவகாரத்தை பொறுத்தவரை சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் மிகவும் கூலாக கூறினார் திண்டுக்கல் சீனிவாசன்.

எடப்பாடிக்கு வெற்றி
ஓ.பன்னீர்செல்வம் எத்தனை வழக்குகள் போட்டாலும் அவருக்கு தோல்வி தான் வரும் என்றும் பொறுத்திருந்து பாருங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தான் வெற்றிகள் குவியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் திண்டுக்கல் சீனிவாசன். இதனிடையே அண்ணாமலை கூறியது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, ''ஏங்க இதெல்லாம் நீங்க அண்ணாமலையிடம் தான் கேட்கணும், என்னிடம் கேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும்'' எனக் கூறி எஸ்கேப் ஆகினார்.
Recommended Video

வீடியோ ஆதாரம்
அதிமுக தலைமைக்கழகம் மீது யார் கல் எறிந்தது, யார் காலால் எட்டி உதைத்தது என்பன உள்ளிட்ட அனைவரது வீடியோ ஆதாரமும் தங்களிடம் வந்துவிட்டதாகவும் இதனால் யாரையும் யாரும் ஏமாற்ற முடியாது எனவும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
-
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications