வரதட்சணை வழக்கு- மாஜி துணைவேந்தர் சேதுபதிக்கான சிறை தண்டனை ஓராண்டாக குறைப்பு
சென்னை: மருமகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்துக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை ஓராண்டாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேலுவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் மோரனஹள்ளியைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் 2002ல் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில தினங்களில் ராஜவேலு அமெரிக்கா சென்று விட்ட நிலையில், சேதுபதி ராமலிங்கம், தன்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாகவும், அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், சங்கீதா, சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சேதுபதி ராமலிங்கம், அவரது மனைவி ஜோதி, மகன் ராஜவேல், மகள் மீனாட்சி அனுராதா, மருமகன் பரமேஸ்வரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சேதுபதி ராமலிங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அதேசமயம், அவரது மனைவி ஜோதி, மகள் மற்றும் மருமகனை விடுவித்து தீர்ப்பளித்தது. சேதுபதி ராமலிங்கத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, சேலம் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சேதுபதி ராமலிங்கமும், அவரை வரதட்சணை சட்டப்பிரிவில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து சூரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், கீழமை நீதிமன்றங்கள் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்து வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, சேதுபதி ராமலிங்கத்தை குற்றவாளி என தீர்ப்பளித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
மேலும், சேதுபதி ராமலிங்கத்திற்கு தற்போது 80 வயதாவதால், அவரது வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு தண்டனையை, ஓராண்டாகக் குறைத்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அதேசமயம், வரதட்சணை குற்றச்சாட்டில் அவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி நிர்மல் குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications