யார்ன்னு பாருங்க.. போயும் போயும் அதுக்கு முன்னாடி இப்படியா நீட்றது.. தாறுமாறு சம்பவம்
சென்னை: ஒரு வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது... இதனை நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.. என்னவாம்?
இணையத்தில் சமீபகாலமாகவே விலங்குகளின் வீடியோக்கள் மக்களை ஈர்த்து வருகிறது.. இந்த விலங்குகள் நம்மை சில சமயம் மனம்விட்டு சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன.
சில சமயம் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. .சில சமயம் அதிர்ச்சியில் உறையவும் வைத்துவிடுகின்றன.. சில சமயம் நெஞ்சை பிழியும் சோகத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.
இந்தி “ராஷ்டிர பாஷையா”? மூஞ்சி.. 'ஜி’க்கு குத்துவிட்ட நடிகை வினோதினி -ஜிஎஸ்டிக்கு பின் அடுத்த வீடியோ

ரசிகர் பட்டாளம்
அதனால்தான், இதுபோன்ற விலங்குகளின் வீடியோகளுக்கு, சோஷியல் மீடியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது... அதிலும் குரங்கு வீடியோக்கள் சமீபகாலமாகவே வைரலாகி கொண்டிருக்கின்றன.. இந்த குரங்குகள் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும்... குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதால்தானோ என்னவோ, குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவது ரசிக்கும்படியாக இருக்கின்றன... உணவு பொருட்களை திருடுவது, நம் கைகளில் உள்ள பொருட்களை பறிப்பது போன்ற செயல்களில், குரங்குகளின் தந்திரங்களும், யுக்திகளும் அசர வைத்துவிடும்.

தண்ணி அடிச்ச குரங்கு
கடந்த மாதம் உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியானது. ரேபரேலியில் குரங்கு ஒன்று, டாஸ்மாக் கடைக்குள் அடிக்கடி புகுந்துவிடுகிறதாம்.. அந்த ஏரியாவில் நிறைய டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், குறிப்பிட்ட இந்த டாஸ்மாக்கை தேடியே அந்த குரங்கு வருகிறதாம்.. கடைக்குள் நுழைந்து, மது பாட்டில்களை திருடிக் கொண்டும் போய்விடுகிறதாக மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்... சில சமயம், அங்கேயே உட்கார்ந்து, தண்ணி அடித்துவிட்டுதான் போகிறதாம்..

குதறல்
இப்படி திருடி குடிப்பதை அந்த குரங்கு வாடிக்கையாக வைத்திருப்பதாகவும், அதை துரத்தி சென்றால் கடித்துக் குதறுவதாகவும் கடைக்காரர்கள் புலம்பி தள்ளுகிறார்கள்.. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கடைக்காரர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள்.. இதன்பிறகு, மற்றொரு குரங்கு வீடியோ வெளியானது.. அதில் ஒரு குரங்கு, துணியை துவைக்கிறது. எப்படி ஒரு சலவைக்காரர் துணியை துவைப்பாரோ, அதுபோலவே அச்சுஅசலாக துணி துவைக்கிறதாம்... அழுக்கு துணியை எடுத்து, தண்ணீரில் நனைத்து, சோப்பு போட்டு, துணியை துவைக்கிறது...

சலவைக்காரர்
பிறகு பிரஷ் வைத்து, தேய்க்கிறது.. நடுநடுவே துணியை, தண்ணீரில் மூழ்கி எடுத்து, மறுபடியும் பிரஷ் போட்டு தேய்க்கிறது.. அப்போதும் அழுக்கு போகாததால், பிரஷ்ஷை ஓரமாக வைத்துவிட்டு, துணியை கையாலேயே அடித்து தேய்க்கிறது.. இப்போதும் ஒரு குரங்கு வீடியோ வெளியாகி உள்ளது.. "இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஏன் முகத்தை வெச்சிட்டு இருக்கே?" என்று நாம் சும்மா ஒரு பேச்சுக்கு பயன்படுத்துவோமே.. அதுமாதிரி நிஜமாகவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.

துண்டு இஞ்சி
இது எந்த ஊர் என்று தெரியவில்லை.. குரங்குகள் நான்கைந்து உட்கார்ந்துள்ளன.. அப்போது ஒருவர், ஒரு பெரிய இஞ்சி துண்டை ஒரு குரங்கிடம் நீட்டுகிறார்.. அங்கிருந்த இன்னொரு குரங்கு, அந்த இஞ்சியை பார்த்ததுமே பாய்ந்து போய் வாங்கிறது.. உடனே அதில் உள்ள தோலை பற்களாலேயே நறநறவென கடித்து துப்புகிறது.. பின்னர் இஞ்சியை வாயில் வைத்து கடிக்கிறது.. அவ்வளவுதான்.. கையில் உள்ள அந்த இஞ்சியை தூக்கி தூர விசிறியடித்துவிட்டது.. அந்த குரங்கு, இஞ்சியை சாப்பிடவே இல்லை..

டெஸ்ட்டிங்
இஞ்சி தின்ன குரங்கு மாதிரி என்கிறார்களே? உண்மையிலேயே குரங்கு இஞ்சியை சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று யாரோ டெஸ்ட் செய்திருக்கிறார்கள் போலும்.. இஞ்சியை குரங்கு சாப்பிடாததால், அதன் முகம் எந்தவித அஷ்டகோணத்திலும் போகவில்லை.. "இஞ்சி தின்ன குரங்கு" என்று நிஜமாகவே இருக்கிறதா என தெரியவில்லை.. ஆனால், இந்த வீடியோதான், இணையத்தில் தாறுமாறாக வைரலாகி கொண்டிருக்கிறது.