பெருங்களத்தூர் ரோட்டுல ஒரே பரபரப்பு.. முடிச்சூர் ரோடு செம பிஸி.. தாம்பரத்துக்கு வந்த ஹேப்பி நியூஸ்
சென்னை: பெருங்களத்தூர் பகுதிக்கு மகிழ்ச்சி செய்தி வரப்போகிறது.. இதைக்கேள்விப்பட்டு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள்.. என்ன காரணம்?
பெருங்களத்தூர் பகுதியை, சென்னை மாநகரின் நுழைவு வாயில் என்பார்கள்.. சென்னைக்கு வெளியே உள்ள புறநகர் பகுதி என்றாலும், முக்கியமான கல்லூரிகள் இந்தப் பகுதியில்தான் இயங்கி வருகின்றன.. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒருபக்கமும், டெக்னாலஜி மறுபக்கமும் என பெருங்களத்தூரே பிஸியாகி விட்டது..
அலர்ஜி: இதனால், வாகன நெரிசல் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.. பெருங்களத்தூர் என்றாலே வாகன ஓட்டிகளுக்கு அலர்ஜி ஆகிவிடும்..

அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல், இந்த பகுதியில் அதிகம் ஏற்பட்டுவிடும். அதிலும் விழாக்காலங்கள் என்றாலோ, விடுமுறை நாட்கள் என்றாலோ சொல்லவே தேவையில்லை.. இன்னும் மழை பெய்துவிட்டால் அவ்வளவுதான்.. ஊர்ந்து ஊர்ந்து செல்வதிலேயே நாள் முழுவதும் முடிந்துவிடும்.
தாமத பணிகள்: பெருங்களத்தூர் ரயில் நிலையம் பகுதியில் மேம்பாலங்களும் இல்லை என்பதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நிறையவே சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 2020ம் அண்டு, 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின்மூலம் அந்த பகுதியில் மேம்பாலங்கள் கட்டும் பணி ஆரம்பமானது.. கொரோனா நேரத்தில், இந்த பணி தாமதமானது.. பிறகு, நிலம் கையகப்படுத்தும் பணிகளால் கொஞ்சம் தாமதமானது..
எனினும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பால பணிகள் விரைவாக கட்டப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது..
ஆனாலும், பெருங்களத்தூரிலிருந்து சீனிவாசா நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பால பணிகள் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து நெடுங்குன்றம் மார்க்கமாக செல்லும் மேம்பால பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்றன. இப்போதுதான், பெருங்களத்தூர் சீனிவாசா நகர் செல்லக்கூடிய மேம்பாலம், ஒருவழியாக கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.. இன்னும் இது திறக்கப்படவில்லை..
இந்த மேம்பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வந்த நிலையில், பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் நாளை மறுநாள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இனி நிம்மதி: பெருங்களத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் விரைவில் நிறைவேறப்போகிறது.. இந்த பாலம் மட்டும் திறக்கப்பட்டு விட்டால், சீனிவாசா நகர், முடிச்சூர், ஆர் எம் கே நகர் , பீர்க்கன்கரணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள், தாம்பரம் மற்றும் வண்டலூர் செல்வதற்கு சுமார் 4 முதல் 5 கிலோமீட்டர் வரை சுற்றி செல்லும் சூழல் இனி ஏற்படாது என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications