தங்க நகை அடகு விஷயத்தில் திடீர் சிக்கல் ஏன்.. ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் சொல்வது என்ன?
சென்னை: தங்க நகைகள் மற்றும் நகைகளை அடமானம் வைத்து கடன் வழங்குவதில் காணப்படும் முறைகேடான நடைமுறைகள் குறித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் விரிவான சுற்றிக்கை ஒன்றை, ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ளது. அனைத்து வங்கிளுக்கும், ரிசர்வ் வங்கியில் அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்து தனியார் நிதி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையின் படியே நகைக்கடனை ஒராண்டில் திருப்பி ஆக வேண்டும் என்று வங்கிகள் வலியுறுத்தியுள்ளன. இதுபற்றி ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் நம்மிடம் கூறியது பற்றி பார்ப்போம்.
தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதன் காரணமாக, அதை வைத்து கடன் பெறலாம் என்று நினைத்த மக்களுக்கு அடுத்தடுத்து இடியாப்ப சிக்கல் வந்த வண்ணம் உள்ளன. தங்க நகைகளை அடகு வைத்தால் பொதுவாக, தங்கள் கடன்தொகையை முழுமையாக கட்டி நகையை திருப்ப முடியவில்லை என்றால் வட்டித் தொகையை மட்டும் கட்டி, மறுஅடகு வைப்பதை வழக்கமாக பலர் வைத்துள்ளார்கள். இதனால், நகைக்கடன் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் அதிக பணத்தை புரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இல்லை. ஆனால் ரிசர்வ் வங்கியானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கிகளுக்கு முக்கியமான சில அறிவுறுத்தல்களை வழங்கியது..

தங்க நகை அடகு
இந்த அறிவிப்பின் படி, நகைக்கடனை பொறுத்தவரையில் ஓர் ஆண்டு முடிவில் மொத்த பணத்தையும் கட்டி நகையை திருப்பிக் கொள்ள வேண்டும். மேலும், திருப்பிய நகையை அதே தினத்தில் மறு கடன் வைக்க முடியாது. ஒரு நாள் முடிந்து, அடுத்த நாள் தான் மீண்டும் புதிய நகைக்கடனை தொடங்க முடியும் .
ரிசர்வ் வங்கிக்கு பறந்த புகார்கள்
நகைக்கடன் வழங்கும் வங்கிகளில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் சென்றன. கடன்களை முடிவுக்கு கொண்டு வராமல் தொடர்ந்து நகைக்கடன் ஐந்து வருடம், 10 வருடம் என நகைக்கடன் அடகு தொடர்வதாக புகார்கள் எழுந்தன. அதேபோல் தங்க நகைகளை மதிப்பீடு செய்பவர்கள் மோசடி செய்து நகைகளை திரும்ப திரும்ப அடகு வைப்பதும் சில இடங்களில் நடந்து வந்தது. இதேபோல் வாடிக்கையாளர்கள் இல்லாமலேயே கடன்களின் மதிப்பீட்டை மதிப்பீட்டாளர்கள் மதிப்பிடுவதும் நடந்து வந்தது. இதனால் ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் விவகாரத்தில், வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
நகைக்கடன் தொடர்பான சுற்றிக்கை
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தங்க நகைகள் மற்றும் நகைகளை அடமானம் வைத்து கடன் வழங்குவதில் தற்போது பின்பற்றும் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்றுவது குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு மதிப்பாய்வை (கடந்த ஆண்டு) மேற்கொண்டது. இந்த மதிப்பாய்வு மற்றும் ரிசர்வ் வங்கியால் நேரடியாக செய்யப்பட்ட ஆய்வுகளின் படி, தங்க நகை அடகு வைப்பதில் பல ஒழுங்கற்ற நடைமுறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
முக்கியமான குறைபாடுகள் என்ன
(i) தங்க நகை கடன்களை ஆதாரமாகக் கொண்டு மதிப்பீடு செய்வதற்கு மூன்றாம் தரப்பினரைப் (நகை மதிப்பீட்டாளர்கள்) பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள்; (ii) வாடிக்கையாளர் இல்லாமல் தங்கத்தை மதிப்பிடுதல்; (iii) தங்கக் கடன்களை இறுதியில் திருப்புவது குறித்து கண்காணிப்பு இல்லாமை (iv) வாடிக்கையாளர் நகையை ஏலத்தில் விடவிடமால் தடுக்க முயற்சி இல்லாதது; (v) நகைக்கடன் தொடர்பான கண்காணிப்பில் உள்ள பலவீனங்கள்; மற்றும் (vi) எடைகளை தவறாக கூறி பயன்படுத்தும் ஆபத்துகள் போன்றவை அடங்கும்.
கண்காணிப்பு இல்லை
எனவே, தங்கக் கடன்கள் தொடர்பான கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளை விரிவாக மதிப்பாய்வு செய்து, இந்த ஆலோசனையின் படி, அதில் உள்ள இடைவெளியை கண்டறிந்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பொருத்தமான தீர்வு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கக் கடன் இலாகாவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும், குறிப்பாக தங்க நகையை அடகு வைத்து பணம் திரட்டி அதன் மூலம் மூன்றாம் தரப்பினர் வெளியில் கடன் சேவைகள் வழங்குவது தொடர்பான விவகாரத்தில் போதுமான கட்டுப்பாடுகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
மேற்கூறியவை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ரிசர்வ் வங்கியின் மூத்த மேலாளருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை பின்பற்றாதது தீவிரமாகக் கருதப்படும், மேலும், மற்றவற்றுடன், ரிசர்வ் வங்கி மேற்பார்வை நடவடிக்கைக்கு உட்படும். இந்த சுற்றறிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது" இவ்வாறு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஃபின்டெக் நிறுவனங்கள்
அத்துடன் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த அந்த சுற்றறிக்கையில், சில மைக்ரோ மற்றும் வங்கிகளில் தங்கக் கடன்களை மதிப்பாய்வு செய்யும் போது காணப்பட்ட குறைபாடுகளின் பட்டியலும் இருந்தது. அதாவது சில நிதி நிறுவனங்கள் மற்றும் சில வங்கிகள் வாடிக்கையாளர் இல்லாத நிலையில் தங்கத்தின் மதிப்பீடு செய்வது தெரியவந்தது. மேலும் தங்க நகைக்கடன் வழங்கி சேமிக்கப்பட்ட தங்க நகைகளை கிளைக்கு தாமதமாக மற்றும் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்வது தெரியவந்தது. ஃபின்டெக் நிறுவனங்கள் (யுபிஐ நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் கடன் நிறுவனங்கள்) மூலம் செய்யப்படும் KYC அப்பேட், கடன்களைத் திருப்பிச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்தது.
விவசாய நகைக்கடன்
சில கடன் வழங்கும் நிறுவனங்களில் நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை.. எடையில் தவறுகள் இருந்ததும் தெரியவந்தது. விவசாயம் அல்லாத கடன்களுக்கு நிதியின் இறுதிப் பயன்பாடு பொதுவாக சரிபார்க்கப்படவில்லை. விவசாய தங்கக் கடன்கள் தொடர்பாக பெறப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட ஆதாரம் அல்லது சரியான ஆவணங்கள் இல்லாமல் இருந்துள்ளது.
டாப் அப் தங்க நகைக்கடன்
கடன்களை எப்போதும் நிலையாக வைத்திருக்க உதவும் வகையில், வங்கிகளில் கோர் பேங்கிங் சிஸ்டம் / லோன் பிராசசிங் சிஸ்டத்தில் டாப் அப் தங்கக் கடன்களுக்கான (தங்க நகையில் கூடுதல் கடன் வழங்கும் போது) சரியான நடைமுறைகள் இல்லை. மேலும், இந்த டாப் அப் கடன்களை அனுமதிக்கும் போது புதிய மதிப்பீடு எதுவும் செய்யப்படுவது இல்லை. பல கடன் கணக்குகள் அனுமதியிலிருந்து குறுகிய காலத்திற்குள், அதாவது சில நாட்களுக்குள் குளோஸ் செய்யப்பட்டிருக்கின்றன. இது அத்தகைய நடவடிக்கைக்கான பொருளாதார நியாயத்தை சந்தேகிக்க வைத்திருக்கிறது.
நகை மதிப்பீடு நடைமுறை
வாடிக்கையாளரால் ஏலத்தில் விடப்பட்ட தங்கத்தின் சராசரி வருவாய், சில வங்கிகளில் தங்கத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பை விட குறைவாக இருந்தது. இதை கவனிக்கும் போது, நகைக்கடன் மதிப்பீட்டிற்கும், நடைமுறையில் நகை எவ்வளவுக்கு போகிறது என்ற என்பதற்கும் இடைவெளிகளை பிரதிபலிக்கிறது.
வருமான வரிச்சட்டம்
வழங்கப்பட்ட மொத்த தங்கக் கடன்களில் ரொக்கமாக வழங்கப்பட்ட தங்கக் கடன்களின் பங்கு சில நிறுவனங்களில் அதிகமாக இருந்தது. வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் ரொக்கமாக வழங்கப்படும் முறையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பூர்வ வரம்பு பல சந்தர்ப்பங்களில் பின்பற்றப்படவில்லை. ஒரு நிதியாண்டில் ஒரே பான் உள்ள ஒரே நபருக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான தங்கக் கடன்கள் வழங்கப்பட்ட நிகழ்வுகள் உள்ளன. இந்த விவகாரத்தில் பலவீனமான பரிவர்த்தனை கண்காணிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கடைசி நேரத்தில் வட்டி மட்டும்
தவணை காலத்தின் முடிவில், பகுதியளவு செலுத்துவதுடன் கடன்களை மாற்றும் நடைமுறையும் இருப்பது தெரியவந்துள்ளது. (அதாவது நகைக்கடனுக்கு கடைசி நேரத்தில் வட்டியை கட்டி திருப்புவது நடக்கிறது)
மூன்றாம் தரப்பு நிறுவனங்கள்
தங்கக் கடன்களை பொறுத்தவரை காலாவதியான கடன்களைப் புதுப்பித்தல்/புதிய கடனை வழங்குதல் போன்றவற்றில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.. மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மீது போதுமான கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கிறது- (இவை அனைத்தையும் மூன்று மாதத்தில் சரி செய்ய வேண்டும்) என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
புதிய நடைமுறை இல்லை
இதுபற்றி நாம் ரிசர்வ் வங்கி வட்டாரங்களில் விசாரித்தோம்.. குறிப்பாக நகை கடனுக்கு வட்டியை மட்டும் கட்டிவிட்டு பின்னாளில் எப்போது பணம் வருகிறதோ அப்போது நகையை திருப்பி வந்தார்கள்.. அந்த நடைமுறை இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளதா என்று கேட்ட போது., அப்படி எல்லாம் எதுவும் ரத்து செய்யப்படவில்லை என்றும், வங்கிகள் தங்க நகை கடனை எத்தனை மாதங்கள், எத்தனை ஆண்டுகள் என்று வழங்குகின்றனவோ அதுபடி நகைகளை அடகு வைத்து தான் திருப்ப வேண்டும் என்றும், இது ஏற்கனவே உள்ள நடைமுறை தான் என்றும் கூறினார்கள்.
ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் சொல்வது என்ன
நகைக்கடன் வழங்கும் போது, வட்டியை மட்டும் கட்டி நகையை திருப்பி வைக்ககக்கூடாது. ஆனால் நடைமுறையில் அப்படி செய்வதால் அவர்கள் நகைக்கடன் என்ற பெயரில் வட்டியே கட்டிக் கொண்டிருப்பார்கள்.. கடன் முதலை கட்ட மாட்டார்கள். அதில் இருந்து அவர்களால் வெளியே வர முடியாத நிலை ஏற்படுவதாகவும், கடைசியில் நகை ஏலத்திற்கு போகும் நிலை ஏற்படுகிறது என்றும், இதை தடுக்கவே ரிசர்வ் வங்கி இந்த நடைமுறையை பின்பற்றுவதாகவும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications