களத்துல சந்திப்போம்.. பாஜக அண்ணாமலைக்கு சவால் விட்ட காயத்ரி ரகுராம்! ‘இந்த’ கட்சியில் இணைய போகிறரா?
சென்னை : கடந்த வாரம் பாஜகவில் இருந்து விலகிக் கொள்வதாக நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அறிவித்திருந்த நிலையில் நேற்று கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நிரந்தரமாக நீக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் அடுத்து அவர் எந்த கட்சியில் இணையப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகளும் நடிகை நடன இயக்குனர் என பல்வேறு முகங்களை கொண்ட காயத்ரி ரகுராம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டினார்.
இதையடுத்து அவர் கட்சியின் கலை இலக்கிய பிரிவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றதற்கு பிறகு மோதல் போக்கு நிலவ தொடங்கியது.

காயத்ரி ரகுராம்
கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதல் இன்றி சார்பு அணி நிர்வாகிகளை அவர் நியமனம் செய்ததாகவும் தொடர்ந்து அவர் குறித்த புகார்களை டெல்லி தலைமைக்கு அனுப்பி வந்ததாகவும் சில தகவல்கள் உலாவின. இதை அடுத்து அவர் வகித்து வந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து சில வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் அண்ணாமலைக்கும் காயத்ரி அவர்களுக்கும் இடையே இலை மறை காயாக மோதல் போக்கு நீடித்து வந்ததாகவே கூறப்படுகிறது.

அண்ணாமலையுடன் மோதல்
அது கடந்த சில நாட்களுக்கு முன்பு அது வெடித்து கிளம்பியது. பாஜகவில் இருந்த சூர்யா சிவா - டெய்சி சரண் ஆடியோ விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பும் வகையில் தொடர்ந்து காயத்ரி ரகுராம் அடுத்தடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டார். இதை அடுத்து கட்சியில் இருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் அதுவரை மறைமுகமாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த காயத்ரி ரகுராம் அடுத்து வெளிப்படையாகவே அண்ணாமலையை விமர்சிக்க தொடங்கினார்.

ராஜினாமா
இதற்கிடையே கடந்த வாரம் பாஜகவில் பெண்களுக்கு மரியாதை சம உரிமை இல்லை எனவும் பாஜகவில் இருந்து வெளியேறும் புடவை கணத்தை இதயத்துடன் எடுக்கிறேன் என காயத்ரி ரகுராம் அறிவித்தார். மேலும் தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார். இந்நிலையில் காயத்ரி ரகுராமின் ராஜினாமா கடிதம் வாட்ஸ் அப் மூலம் கிடைத்ததாகவும் இதை அடுத்து அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சி தலைமை அறிவித்தது.

களத்தில் சந்திப்போம்
இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட காயத்ரி ரகுராம்,"என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம்" என பதிவிட்டிருந்தார்.

எந்த கட்சி
மீண்டும் களத்தில் சந்திப்போம் என்ற பதிவின் மூலம் காயத்ரி ரகுராம் மீண்டும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து தீவிர கள அரசியலுக்கு திரும்புவார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். பாஜக எதிர்ப்பு என்பதை விட அண்ணாமலை எதிர்ப்பே காயத்ரி ரகுராமின் தீவிர அரசியல் முழக்கமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் திமுக அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக - விசிக
காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம்," தன்னை அழைத்தால் திமுக அல்லது விசிகவில் இணைய தயார்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காயத்ரி கிராமம் திமுகவில் இணைய விரும்பினால், பெரியார் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றினால் திமுக தலைமையும் முதல்வரும் ஏற்றுக் கொள்வார் எனக் அமைச்சர் பொன்முடியும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக திமுகவில் அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் காயத்ரி இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு












Click it and Unblock the Notifications