Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'வந்ததே ஆத்திரம்' மாமியாருடன் 'அப்படி'..கள்ளக்காதலனை சம்பவம் செய்த மருமகன்.. சென்னையில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ரெட் ஹில்ஸ் அருகே மத்திய அரசு ஊழியர் வெட்டிக்கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் மத்திய அரசு ஊழியருடைய கள்ளக்காதலியின் மருமகனை தீவிரமாக போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் அடுத்த பூச்சி அத்திப்பேடு கள்ளிக்குப்பத்தில் 60 வயதாகும் முத்துகிருஷணன் என்பவர் வாழ்ந்து வந்தார். முத்துக்கிருஷ்ணன் ரெட்ஹில்ஸ் அருகே அலமாதியில் அமைந்திருக்கும் மத்திய கால்நடை அபிவிருத்தி பண்ணையில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் இருக்கிறார்கள்

முத்துகிருஷ்ணனுக்கு செங்குன்றத்தை அடுத்த அலமாதி எடப்பாளையம் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவி என்ற பாக்கு ரவி என்பவருடைய மனைவி எஸ்தருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாம். கடந்த 15 ஆண்டுகளாக இவர்கள் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்தார்களாம் இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாக்கு ரவி இறந்துவிட்டார். அதன்பிறகு இவர்களின் திருமணத்தை மீறிய உறவுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. மாறாக நெருக்கம் அதிகரித்தாக கூறப்படுகிறது.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

இந்த நிலையில் எஸ்தரின் மகள் தீபிகாவுக்கும், எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(23) என்பவருக்கும் திருமணம் ஆனது. தனது மாமியாரின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த மணிகண்டனுக்கு, முத்துகிருஷ்ணன் வந்து செல்வது சுத்மாக பிடிக்கவில்லை. எனவே முத்துகிருஷ்ணனிடம் எனது மாமியாருடனான கள்ளக்காதலை கைவிடும்படியும், இனிமேல் மாமியார் வீட்டுக்கு வந்து செல்வதையும் கைவிடும்படி எச்சரித்திருக்கிறார்.

கைகலப்பு

கைகலப்பு

ஆனாலும் அவர் கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் கைகலப்பும் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் புதன்கிழமை மதியம் முத்துகிருஷ்ணன் வழக்கம்போல் தனது கள்ளக்காதலி எஸ்தர் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது மாமியார் வீட்டில் இருந்த மணிகண்டன் கடும் ஆத்திரம் அடைந்திருக்கிறார்.

மத்திய அரசு ஊழியர்

மத்திய அரசு ஊழியர்

அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து முத்துகிருஷ்ணனை சரமாரியாக வெட்டினார். தலையில் பலத்த வெட்டு விழுந்ததால் படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அதன்பின்னர் மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரெட்ஹில்ஸ்

ரெட்ஹில்ஸ்

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சோழவரம் போலீசார், கொலை செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மாமியாரின் கள்ளக்காதலனை மருமகன் கொலை செய்த சம்பவம் ரெட் ஹில்ஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+