Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை...முதல்வர் படத்துடன் போலி விண்ணப்பம் - அரசு விளக்கம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் குடும்ப தலைவிகள் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் படத்துடன் குடும்பத் தலைவிகள் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்படுவது, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவ்வாறு விண்ணப்பம் எதுவும் வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் பொதுத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகியும்தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி இதுவரை குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி, அதில் குடும்பத் தலைவிக்கான உரிமைத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்று பிரச்சாரம் செய்து வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரம் ரூபாய் எப்போது தருவீர்கள் என்று பெண்கள் கேள்வி எழுப்பி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் உறுதி

முதல்வர் ஸ்டாலின் உறுதி

இந்த சூழலில் கடந்த 13ஆம் தேதி திண்டுக்கல் பிரச்சாரக் கூட்டத்தில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, 'பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப் போகிறோம். யாரையும் ஏமாற்ற மாட்டோம்' என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் குறிப்பாக ஏழை இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முதல்வர் படத்துடன் விநியோகம்

முதல்வர் படத்துடன் விநியோகம்

இதனிடையே உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழக அரசின் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகைக்கான விண்ணப்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடை எண், குடும்பத் தலைவி பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, குடும்ப அட்டை வகை, குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு எண், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவரா? ஆம் எனில் பிபிஎல் பட்டியல் எண் ஆகியவை கோரப்பட்டுள்ளது. அதன் கீழ், குடும்ப அட்டைதாரர் விவரம் குறிப்பிடப்பட்டு, ரூ.1000 பெற தகுதி பெறுகிறாரா, இல்லையா என்று விண்ணப்பத்தை சரிபார்த்து சான்றளிப்பவர் கையொப்பமிடும் இடமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி விண்ணப்பம்

போலி விண்ணப்பம்

சமூக வலைதளங்களில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்டு விண்ணப்பம் ஒன்று வைரலாகி வருகிறது. பல ஊர்களில் அந்த விண்ணப்பம் பெண்களுக்கு விநியோகம் செய்வதாகவும், ரேஷன் கடை ஊழியர்கள் வழியாக ரேஷன் கார்ட் அட்டைத்தாரர்களுக்கு வழங்க முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது. திட்டம் தொடர்பாக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், போலியான விண்ணப்பம் தயாரித்து விநியோகம் செய்வதாகவும், அதனை தடுக்கக்கோரி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இதுதொடர்பாக ட்வீட் செய்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை விநியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம்.

அரசு விளக்கம்

அரசு விளக்கம்

உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக விநியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவ்வாறு எந்த விதமான விண்ணப்பமும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+