90ஸ் கிட்ஸ்களே.. 'உஷார்'.. அழகான பெண்களின் படம்.. போலி மேட்ரிமோனியல் வெப்சைட்களின் பகீர் காரியம்
சென்னை: திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்களை குறிவைத்து மோசடியில் இறங்கி உள்ள கும்பல், அழகான பெண்களின் புகைப்படத்தை வெளியிட்டு போலி மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டி வருகிறது.
இதற்காக மோசடி பெண்களை, திருமணத்துக்காக பதிவு செய்துள்ள ஆண்களுடன் செல்போனில் பேச வைத்து 'அவசரம்' என்ற பெயரில் பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இன்றைய சூழலில் 30 வயதை கடந்த ஆண்கள் பலர் தங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்காமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பல சமூகங்களில் 10 வருட வித்தியாசத்தில் தான் பெண்கள் கிடைக்கிறார்கள். சில சமூகத்தில் பெண் குழந்தைகள் அதிகம் இல்லாத காரணத்தால், திருமண வயதை கடந்து பலர் தவித்து வருகிறார்கள்.

90ஸ் கிட்ஸ்கள்
ஒரு குழந்தைக்கு மேல்பெற்றுக்கொள்ளாதது, இரண்டு குழந்தைகளுக்கு மேல் வீட்டில் இல்லாத நிலை, ஆகிய காரணங்களால் சமூகத்தில் பாலின விகிதாசரம் பெரிய அளவில் மாறி உள்ளது. இதுதான் இப்போது 90ஸ் கிட்ஸ்களுக்கு தலைவலியாக மாறி உள்ளது. வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டு திருமணம் செய்யலாம் என்று காத்திருந்த பலர் இப்போது திருமணத்திற்கு வரன் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.

மேட்ரிமோனியல் வெப்சைட்
இதனிடையே பெற்றோர்கள் திருமணத்துக்காக தங்கள் மகனுக்கு, கல்யாண தரகர் மூலம் வரன் தேடி பெற்றோர் பல்வேறு ஊர்களுக்கு செல்கிறார்கள். அதே போல் புற்றீசல் போல் பெருகிவிட்ட , மேட்ரிமோனியல் இணையதளங்களிலும் தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டனர்.

பதிவு செய்ய வேண்டும்
அதன்படி மேட்ரிமோனியல் தளத்தில் தங்கள் பெயர், சம்பளம், தொழில், விரும்பும் பெண்கள், என்ன மதம், ஜாதி, என்று குறிப்பிட்டு வரன் தேடும் இளைஞர்கள் பதிவு செய்கின்றனர். இதேபோல் திருமணமாகாத பெண்களின் குடும்பத்தினரும் மணமகன் தேவை என்று அதே மேட்ரிமோனியலில் பதிவு செய்கிறார்கள். பிரபலமான மேட்ரிமோனியல் வெப்சைட்கள் முறையாக பதிவு செய்து, தங்களது வாடிக்கையாளர்களுக்கு தேவையான விவரங்களை சரியாக வழங்கி வருகின்றன.

ஏமாறும் ஆண்கள்
ஆனால் ஒரு சில வெப்சைட்டுகள் பணம் பறிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டு ஆண்கள் பலரை ஏமாற்றி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
மேட்ரிமோனியல் வெப்சைட்டிற்குள் சென்றால் இலவச ரிஜிஸ்ட்ரேஷன் என்று வரும். அதற்குள்ளே சென்று நமது பெயர் மற்றும் விவரங்களை பதிவிட்டு, புகைப்படத்தை அப்லோட் செய்து விட்டால், பொருத்தமான வரன் வந்துள்ளது என்று சம்மந்தப்பட்டவர் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைப்பார்கள். அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். தற்போது, மேட்ரிமோனியலில் மணமகள் தேடி பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் எண்ணை பெற்று அதில், அழகான இளம்பெண் புகைப்படத்தை அனுப்புகிறார்கள். மணமகன் தேடுபவர் என்றால் அழகான இளைஞரின் புகைப்படம் அனுப்புகின்றனர். அவர்கள் பற்றி விவரங்களை அறிந்துகொள்ள முதலில் 1000 முதல் 7000 வரை செலுத்த வேண்டும். அதிலும், பேக்கேஜ் முறையை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

தமிழ் தெரியாது
அவ்வாறு பணம் கட்டி உள்ளே சென்று பார்க்கும்போது ஆரம்பத்தில் நிறைய பெண்களின் புகைப்படங்கள் மற்றும் ஜாதகங்களை அனுப்புகிறார்கள். இவை பிரபலமான மேட்ரிமோனியல் வெப்சைட்களில் ஓரளவிற்கு சரியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சில வெப்சைட்களில் பெங்களூரு, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்களின் புகைப்படங்களே அதிகமாக பதிவிடுகிறார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞருக்கு தமிழே தெரியாத வெளிமாநில பெண்ணின் படம், அவரின் சம்பளத்தை லட்சக்கணக்கில் குறிப்பிட்டு அனுப்புகிறார்கள்.

அவசர தேவை
இதனிடையே அந்த பெண்ணின் செல்போன் எண்ணை தருவதற்கு, ஒரு கட்டணத்தை வாங்கிக்கொண்டு, அந்த பெண்ணிடம் பேச வைப்பார்கள். அவ்வாறு பேசும் பெண் குறிப்பிட்ட அந்த வெப்சைட்டுக்கு நன்கு அறிமுகமான பெண்ணாக இருப்பதாக கூறப்படுகிறது. . அவர் ஒரு வாரம், 10 நாள் பழகி, உங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேசி , திடீரென ஒருநாள் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.

40 வயதை கடந்தவர்கள்
இன்ஜினியர், டாக்டர், பிஸ்னஸ் மேன் என்று புரொபைல் இருப்பவர்களை இந்த கும்பல் குறிவைத்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மறுமணம் என்று வரும் நபர்களை குறிவைத்து பணம் பறிப்பது அதிகமாக உள்ளதாம். பணத்தை இழந்த பலர், அந்த மோசடி கும்பலிடம் இருந்து அதை திரும்ப பெற முடியாமல் தவிக்கிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் ஏமாற்றப்படுவதாக கூறப்படுகிறது. 30 வயதை கடந்தவர்கள், 40 வயதை கடந்தவர்கள் ஏமாறுவது அதிகமாக உள்ளது. எனவே பெண் தேடுவோர் கவனமாக இருப்பது நல்லது என்கிறார்கள் ஏமாந்தவர்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications