ரஞ்சிதா "பிரதமர்" ஆகிறார்.. "கைமாறும்" ஆட்சி.. அப்ப நிஜமாவே கிளம்பி கைலாசா போயிட்டாரா..தலை சுத்துதே
சென்னை: பிரபல நடிகை ரஞ்சிதா, பிரதமர் ஆகப்போகிறாராம்.. இதை பற்றிதான் ஒரே பேச்சாக இருக்கிறது.. இது தொடர்பாக ஒரு போட்டோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.. இதெல்லாம் உண்மையா? பொய்யா? குழம்பி கிடக்கிறார்கள் இணையவாசிகள்..!!
இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் -- தொழில்நுட்பம் பெருகி வரும் காலகட்டத்தில் -- உலகின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் யாரிடமும் எளிதாக அணுகலாம் என்ற சூழலில் -- உலகமே கைக்குள் அறிவியலாய் அடங்கிவிட்ட நிலையில் -- இன்னும் நித்யானந்தாவை மட்டும் கைது செய்ய முடியாத அதிசயம் நம் நாட்டில் மட்டுமே நடந்து வருகிறது.
ஆனால், இன்னைக்கு வரைக்கும் அந்த கைலாசா தீவு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.. உலக மேப்பில் இன்னும் நம் போலீசார் தேடி கொண்டே இருக்கிறார்கள்.

புதிய நாடு: கைலாசாவில் இருந்து வீடியோ, ஆடியோ, போட்டோக்கள், உட்பட சுடசுட செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன.. லைவ் டெலிகாஸ்ட்களும் நடக்கின்றன.. இந்த கைலாசா என்பது மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளதாக சொல்கிறார்கள்..
அந்த நாட்டுக்கு செல்வதற்கு நம்ம ஊரில் இருந்து நிறைய பேர் அப்ளிகேஷன்கூட போட்டார்கள்.. கைலாசாவில் டீ கடை வைக்க போகிறேன், கைலாசாவில் விவசாயம் செய்ய போகிறேன் என்று கூறி லெட்டர்களும் தமிழகத்தில் இருந்து பறந்தன.

போட்டோக்கள்: ஆனால் கைலாசா எங்கே இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.. இத்தனைக்கும் அந்த நாட்டுக்கான தனி பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்டவற்றை அறிவித்த நித்தி, வர்த்தக ரீதியில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்தவதாகவும் சொல்லியிருந்தார்.. அத்துடன், அந்த நாட்டு பிரதிநிதிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற போட்டோக்கள்கூட சோஷியல் மீடியாவில் வெளியாகியிருந்தன.
இதனிடையே நித்யானந்தாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திடீரென தகவல்கள் வெளியானது... ஆனாலும், அதற்கு பிறகும், சோஷியல் மீடியவில் நேரலையில் தோன்றி சொற்பொழிவு ஆற்றிக்கொண்டு இருக்கிறார் நித்தியானந்தா..

ஐநா விளக்கம்: இதுபோக, கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐநாசபை மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கைலாசா என்ற ஒரு நாடே இல்லாத போது, அதன் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி? என்றும் கேள்விகள் வலம்வந்தன. இதற்கு ஐநா செய்தி தொடர்பாளர்கள் ஒரு விளக்கம் தந்திருந்தனர்.. அதில், பெண் பிரதிநிதி பங்கேற்று பேசியிருந்த பேச்சு எடுத்துக்கொள்ளப்படாது என்று கூறியிருந்தனர்..
நடிகை ரஞ்சிதா: இப்படி சர்ச்சை மேல் சர்ச்சை என ஹிட் அடித்து கொண்டிருக்கும் கைலாயா பற்றி இன்னொரு பரபரப்பு கிளம்பி உள்ளது. நடிகை ரஞ்சிதா, கைலாயா நாட்டுக்கு பிரதமராக போகிறாராம்.. கைலாசாவின் இணையதள செயலியான லிங்க்டு இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் போட்டோ, "நித்யானந்தா மாயி சுவாமி" என்ற தலைப்பில் உள்ளது.. அதற்கு கீழே "கைலாசாவின் பிரதமர்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. இதுதான் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.

நித்தியானந்தா விவகாரம் வெடித்தபோதே, ரஞ்சிதாவின் பெயரும் சேர்ந்தே வெடித்தது.. நித்தியானந்தா நாடுவிட்டு நாடு ஓடவேண்டிய சூழல் வந்தபோதும், அவரது சிஷ்யையான ரஞ்சிதாவும் ஓட வேண்டியதாயிற்று.. அந்தவகையில், தொடர்ந்து தொடர்பிலேயே இருந்துவருவதாக தெரிகிறது.
இது நிஜமா?: நித்தியானந்தா நடத்தும் நிகழ்வுகளில் ரஞ்சிதா பங்கேற்று, அந்த வீடியோக்கள், போட்டோக்களும் இணையத்தில் அடிக்கடி வெளியாகிய வண்ணம் இருந்தன. தொடர்ந்து சிஷ்யையாக இடம்பிடித்து வரும்நிலையில், பிரதமர் பட்டத்தை ரஞ்சிதாவுக்கு தந்திருக்கலாமோ? என்றும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. இந்த செய்திதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. அப்படின்னா கைலாசா என்ற நாடு நிஜமாகவே இருக்கா?
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications