மேடம் போற உசுரு மழைலயே போட்டும்..! ஆனா சுந்தர் சி சாரை..? குஷ்புவுக்கு ரசிகரின் வேண்டுகோள்
சென்னை: நீங்கள் வீட்டுக்குள்ளேயே இருங்க. ஆனால் சுந்தர் சி கிட்ட சொல்லி அரண்மனை 4 வேண்டாம்னு சொல்லுங்கள். போற உசுரு மழைலயே போகட்டும் என ரணகளத்திலும் நெட்டிசன்கள் கலகலப்பாக குஷ்புவுக்கு ட்வீட் போட்டுள்ளனர்.
நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸின் காஞ்சனா படம் பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3 என வந்ததை போல் இயக்குநரும் நடிகருமான சுந்தர் சியின் அரண்மனை படம் பார்ட் 1, பார்ட் 2 என வந்த நிலையில் கடந்த வாரம் அரண்மனை 3 வெளியானது.
இதில் சுந்தர் சி, ஆர்யா, ஆண்டிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அரண்மனை முதல் பார்ட்டை போல் வெயிட்டான கதை இல்லை என ரசிகர்கள் கருதுகிறார்கள்.

வெற்றி
பொதுவாக ஒரு படம் வந்துவிட்டால் அது வெற்றி அடைந்தவுடன் இன்னொரு பார்ட் எடுப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இயக்குநர்களோ அதை மேலும் மேலும் நீட்டித்துக் கொண்டே போகிறார்கள். இது ரசிகர்களுக்கு ஒரு வித சலிப்பை கொடுக்கிறது. இதையேதான் அரண்மனை 3 கொடுத்துள்ளது. அடுத்ததாக அரண்மனை 4 வேண்டாம் என ரசிகர் ஒருவர் கோரிக்கையாக குஷ்புவிடம் வைத்துள்ளார்.

சென்னையிலும் சென்னைக்கு அருகிலும்
குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அன்பானவர்களே சென்னையிலும் சென்னைக்கு புறநகர் பகுதியிலும் உள்ளவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஒவ்வொரு முறையும் இயற்கையின் இந்த சேதத்தை நாம் கடந்து செல்ல வேண்டியுள்ளது. நாங்கள் இருக்கிறோம். உங்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்கிறோம் என்றார்.

நெட்டிசன்
அந்த ட்வீட்டுக்கு நெட்டிசன்களும் எதிர்க்கட்சியினரும் களத்தில் மக்களுக்கு உதவி செய்ய நீங்கள் வரவில்லையே என கேட்டுள்ளார்கள். அதற்கு அவர் இன்னொரு ட்வீட்டில் கூறுகையில் நான் களத்தில் இல்லையேனு கேட்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், நான் களத்தில் இல்லாவிட்டால் என்ன? எனக்கென ஒரு குழு இயங்குகிறது.

உதவி
அவர்கள் களத்தில் சென்று உதவி தேவைப்படுவோருக்கு உதவுவர். எனவே குற்றம் சொல்பவர்கள் பேசாம உட்கார்ந்து கொண்டு போனை நோண்டி கொண்டிருங்கள் என தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன் ஒருவர் பதில் அளித்துள்ளார். அதில் மேடம் சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும். அதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.

குஷ்புவுக்கு கோரிக்கை
நீங்கள் களத்திற்கெல்லாம் வராதீங்க. நீங்கள் பத்திரமாக வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஆனால் தயவுசெய்து சுந்தர் சி சார் கிட்ட அரண்மனை 4 எடுக்க வேண்டாம்னு எங்கள் சார்பாக ஒரு கோரிக்கையை வையுங்கள். போற உசுரு மழைலயே போகட்டுமே என குஷ்புவுக்கு கமென்ட் போட்டுள்ளார். களத்தில் இறங்கி பணியாற்றுவது என்பது அவரவர் விருப்பம். அதை கூட கேட்கலாம், ஓட்டுக்கு மட்டும் வரீங்க, உதவிக்கு வர மாட்டேங்கிறீங்கன்னு, ஆனால் படம் எடுப்பது தொழில், அதை இவர்கள் தலையிடுவது எந்த விதத்தில் நியாயம் என சுந்தர் சி ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications