"டனுக்கு ரடுக்கு ரடுக்கு டும் டும்".. ஆஹா! அழகான வாழ்க்கை! நடிகை பவுலின் 1 வினாடி யோசித்திருக்கலாமே
சென்னை: நடிகை பவுலின் ஜெசிகா செய்த டனுக்கு ரடுக்கு ரடுக்கு டும் டும் ரீல்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, பிரதியுக்ஷா, நகைச்சுவையாளர் ஷோபனா, சிம்ரன் தங்கை மோனல், நடிகை விஜே சுகுணா என்கிற சபர்ணா, கனவு கன்னி சில்க் ஸ்மிதா வரை காதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக தங்களுக்கு தாங்களே முடிவுரை எழுதி கொண்டனர்.
இவர்கள் அனைவருக்குமே அத்தனை திறமைகள் இருந்தும் வசதி வாய்ப்புகள் இருந்தும் தங்கள் வாழ்க்கையை முடித்து கொண்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் வேதனையை தருகிறது.

ரசிகர்கள்
அந்த குறிப்பிட்ட நடிகை ஏதோ விதத்தில் ரசிகர்களை கவர்ந்திருப்பர், ஒரு நாள் திடீரென அவர்கள் இல்லை என்றால் ரசிகர்களுக்கு அது அதிர்ச்சியாகவே ஆகிவிடுகிறது. நேற்று இரவு வரை நன்றாக இருந்துவிட்டு திடீரென மறுநாள் இறந்தவர்களும் ஏராளம். அந்த வகையில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் தனது அழகான தோற்றத்தின் மூலம் நடிகை பவுலின் ஜெசிகா மிகவும் பிரபலம்.

துணை நடிகை
இவர் சில படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார். வாய்தா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருவது வழக்கம். கடந்த 3 தினங்களுக்கு முன்பு கூட திருச்சிற்றம்பலம் படத்தில் காதல் தோல்வியால் கவலைப்படும் தனுஷுக்கு நித்யா மேனன் அட்வைஸ் செய்யும் வசனத்தை பேசியிருந்தார்.

விருகம்பாக்கத்தில் தற்கொலை
இந்த நிலையில் இவர் நேற்றைய தினம் விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பவுலினின் உறவினர்கள் நேற்று அவரை போனில் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பவுலினின் நண்பரிடம் கூறி அவரை போய் பார்க்குமாறு உறவினர்கள் கூறினர். அதன்படி பவுலின் ஜெசிகாவின் நண்பர் பிரபாகரன் அவரது வீட்டுக்கு போய் பார்த்தார்.

பவுலின் ஜெசிகா
அப்போது பூட்டிய அறையில் ஜெசிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து ஜெசிகாவின் சகோதரர் மூலம் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வீட்டை சோதனையிட்ட போது அங்கு ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் தான் ஒருவரை விரும்பியதாகவும் அவர் அதை ஏற்க மறுத்ததால் தான் இந்த விபரீத முடிவை எடுப்பதாகவும் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

சொல்லியிருக்கலாமே
இந்த சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன் போட்ட இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள், "உங்கள் மனக்குறையை எங்களிடம் சொல்லியிருந்திருக்கலாமே, ஏன் இப்படி ஒரு முடிவு" என கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும் சிலர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அட்டகாசமாக நடிப்பார் என்கிறார்கள். இவர் 2020 ஆம் ஆண்டு நடித்த டனுக்கு ரடுக்கு ரடுக்கு டும் டும் வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி இத்தனை அழகான வாழ்க்கை வாழ்ந்த நீங்கள் ஒரு வினாடி யோசித்திருந்தால் தவறான முடிவிலிருந்து தப்பியிருக்கலாமே என்கிறார்கள்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications