"அல்லேலுயா.. துன்பமும் துயரமும்.." மெர்சியின் இறுதி சடங்கில் தந்தை பாடிய பாட்டு.. உருக்கமான தருணம்!
இளம்பெண் மெர்ஸிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
Recommended Video
சென்னை: "அல்லேலுயா.. துன்பமும் துயரமும் வேதனையோ உம்மை விட்டு.." என்று தொண்டை அடைக்க கண்ணீர் மல்க மகள் மெர்சியின் இறுதி சடங்கில் பாடினார் பெற்ற தந்தை!
சென்னை அடுத்த ஆவடி அருகில் உள்ள பட்டாபிராம் பகுதியை சேர்ந்த தம்பதி தாஸ் - பியூலா. இந்தத் தம்பதியின் மூத்த மகன் அப்பு. 24 வயதாகிறது. இவர் ஒரு என்ஜினியர்.
பியூலாவின் சகோதரர் தாமஸின் மகள் மெர்ஸி. இவருக்கு 21 வயதாகிறது. பிகாம் படித்துவிட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அப்புவுக்கும் மெர்சிக்கும் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு, போன 2-ம் தேதி நிச்சயதார்த்தமும் நடந்தது. ஜனவரியில் கல்யாணத்தை வைத்திருந்தனர்.

செல்பி
இதனிடையே, அப்புவும், மெர்ஸியும் பைக்கில் கண்டிகை பகுதிக்கு சென்றுள்ளார்கள். அங்கு விவசாய பகுதியில் செல்பி எடுக்க முயலும்போதுதான், கால்தவறி மெர்சி விழ.. அவரை காப்பாற்ற போய் அப்புவும் கிணற்றில் விழுந்துவிட்டனர். மெர்சி சேற்றில் வசமாக சிக்கி கொள்ள, கடைசியில் அப்புவை மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் காப்பாற்ற முடிந்தது.

ஆசையா இருக்கு
தற்போது அப்பு பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார். சின்ன வயசிலிருந்தே பழகி வந்த மெர்ஸியின் பிரிவை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த அப்புவை, வா வெளியில் போகலாம் என்று மெர்சிதான் கூட்டிப் போயுள்ளார். பைக்கில் ஒரு ஜாலி ரைடு போக போய்.. போற வழியில் வயலைப் பார்த்த மெர்சிக்கு போட்டோ எடுக்க ஆசை வர.. அதனால்தான் வயல்வெளிக்கு போயுள்ளனர். அங்கிருந்த கிணற்றில் படிக்கட்டு, தண்ணீர் இருக்கவும்தான் உள்ளே இறங்கி போகலாம் என்று ஆசை வந்திருக்கிறது.

வழுக்கியது
மெர்சிக்கு, கிணத்து தண்ணியில கால் வைக்கலாமா என்று ஆசையாக மெர்சி கேட்க, அதற்கு அப்பு வேண்டாம் என்று தடுத்துள்ளார். "எனக்காக இதைகூட செய்ய மாட்டியா" என்ற மெர்சியின் ஆசையாக கேட்கதான் அப்பு அதற்கு சம்மதித்துள்ளார். ஒவ்வொரு படிக்கட்டில் இறங்கி செல்லும்போதும் மெர்சி முகத்தில் சந்தோஷம் இருந்ததாம்.. அப்போதுதான் படிக்கட்டில் படிந்திருந்த பாசி வழுக்கிவிட்டு.. மெர்சி அப்பு மேல்.. அப்புவும் சேர்ந்து கிணற்றுக்குள் விழ, கடைசியில் பிணமாகத்தான் மெர்சியை மீட்க முடிந்தது.

நல்லா பாடுவார்
மெர்சியின் அப்பா தாமஸ் ஓய்வுபெற்ற காவலர் ஆவார். மெர்சி நன்றாக படிப்பாராம்.. எல்லாருடனும் இனிமையாக பேசுவாராம்.. நல்லா பாடுவாராம்.. பட்டாபிராம் சர்ச்சில் மியூசிக் ட்ரூப்பில் மெர்சி இருந்து வந்துள்ளார். அதனால் அந்த சர்ச் முழுக்க மெர்சி ரொம்பவும் ஃபேமஸ்... அதனால் மெர்சியின் மரணம் அவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

பிரார்த்தனை
நேற்றைய இறுதிச் சடங்கில் மொத்த சர்ச்சும் கலந்துகொண்டனர். அப்போது மெர்சியின் தந்தை மகளுக்காக பிரார்த்தனை செய்தார். "என் அன்புமகளை, பரலோக ராஜ்ஜியத்தில் மனமகிழ்ச்சியாக வைத்திருப்பார்" என்று கண்ணீர்மல்க பிரார்த்தனை செய்தார். பிறகு, "அல்லேலுயா, துன்பமும் துயரமும் வேதனையோ உம்மை விட்டு".. என்ற பாடலை பாட ஆரம்பித்ததுமே எல்லோரும் கதறி அழுது விட்டனர்.

நல்லடக்கம்
இந்த பாட்டு மெர்சிக்கு ரொம்ப பிடிச்ச பாட்டாம்.. அப்பா மகளுக்காக பாட ஆரம்பித்ததும், எல்லோருமே சேர்ந்து இந்த பாட்டை பாட ஆரம்பித்தனர். அந்த சமயத்தில்தான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்திருந்தார் அப்பு.. மெர்சி உடலை பார்த்து கதறினார்.. உணர்ச்சி பிழம்பில் அந்த இடமே தகித்து காணப்பட்டது. இறுதியில் நல்லடக்கமும் செய்யப்பட்டது!
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications