தமிழக அரசு அதிரடி.. படுவேகமாக கோவை, மதுரை மெட்ரோ பணிகள்.. பொதுமக்கள் ரொம்பவே ஹேப்பி! சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை, கோவை நகரங்களிலும் மெட்ரோ அமைப்பது குறித்த பணியில் தமிழக அரசு அறிவிப்புடன் நிற்கவில்லை.. அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்திய நகரங்களில் இப்போது டிராபிக் தான் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சாலைகளில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்தே வருகிறது. இதனால் சாலைகள் நெரிசல் மிகுந்ததாக மாறி வருகிறது.

பீக் ஹவரில் வெளியே சென்றால் சில மணி நேரமாவது டிராபிக்கில் நிற்க வேண்டிய சூழலே இப்போது இருக்கிறது. சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களைத் தாண்டி இப்போது இரண்டாம் கட்ட நகரங்களிலும் டிராபிக் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது.

நாம் என்ன தான் சாலைகளை விரிவாக்கம் செய்து மேம்பாலங்களைக் கட்டினாலும் டிராபிக் பிரச்சினையைக் குறைக்க முடியாது. இதை அதிகப்படுத்த அதிகப்படுத்த நெரிசல் அதிகரிக்கவே செய்யும். இதற்கு உலகெங்கும் நாம் பல உதாரணங்களைப் பார்த்துள்ளோம். மக்கள் எப்போது பொது போக்குவரத்தை நோக்கி வருகிறார்களோ அப்போது தான் டிராபிக் குறையும் என்பதே வல்லுநர்கள் பரிந்துரைப்பது. இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து வலுவாகவே இருக்கிறது.

சென்னையை எடுத்துக் கொண்டோம் என்றால் மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள் இருந்தன. இத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோவும் இணைந்தது. சென்னை மெட்ரோவுக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தைக் காட்டிலும் அதிகப்படியான மக்கள் மெட்ரோவை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். டிராபிக் பிரச்சினை இல்லை, ஏசி பயணம் எனப் பல விஷயங்களை இதற்கு நாம் காரணமாகச் சொல்லலாம்.

Feasibility report of Coimbatore and Madurai metro will be submitted next month

தலைநகர் சென்னையில் இப்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ இயங்குகிறது. விம்கோ நகர் முதல் சென்னை ஏர்போர்ட் வரை, சென்டிரல் முதல் பரங்கி மலை வரை என மொத்தம் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ இயங்கி வருகிறது. அதிகரிக்கும் டிராபிக்கை கருத்தில் கொண்டு மாதவரம் பால் பண்ணை- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் என 3 வழித்தடங்களில் மெட்ரோவை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க இப்போது சென்னைக்கு இணையாக மற்ற இரண்டாம் கட்ட நகரங்களிலும் டிராபிக் அதிகரித்தே வருகிறது. உதாரணமாக நாம் மதுரை, கோவை நகரங்களைச் சொல்லலாம். தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நகரங்களில் முக்கிய இடங்களைப் பிடித்துள்ள இந்த இரண்டு நகரங்களிலும் டிராபிக் தலைவலியாக மாறி வருகிறது. இரு நகரங்களிலும் டிராபிக் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இதன் காரணமாக மதுரை, கோவை நகரங்களிலும் மெட்ரோ அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பும் கூட கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இரு நகரங்களிலும் மெட்ரோ வந்தால் அது நிச்சயம் உட்கட்டமைப்பில் பெரிய பூஸ்டாக அமையும். பொதுமக்களால் மிக எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல முடியும். இது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

இரு நகரங்களில் மெட்ரோ அமைக்கப்படும் என்ற அறிவிப்புடன் நிற்கவில்லை.. அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் தமிழக அரசு தீவிரம் காட்டியது. இதையும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தான் கவனித்து வந்தது. அதன்படி மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் படுவேகமாக நடந்து வந்தது. இதற்கிடையே விரிவான திட்ட அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 90% சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாகவும் ஜூலை மாதம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தான் இதில் முதல் படி... இதை வைத்துத் தான் மத்திய மாநில அரசுகள் திட்டத்திற்கு ஒப்புதல் தரும். இதற்கு மட்டும் ஒப்புதல் அளித்துவிட்டால் பணிகள் படுவேகமாக ஆரம்பிக்கும்.

கோவையைப் பொறுத்தவரை அவினாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலை வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வரை மெட்ரோவை அமைக்க முடிவு செய்துள்ளனர். அதேபோல மதுரையில் திருமங்கலத்திலிருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோவை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+