பெண் வக்கீலின் அந்தரங்க வீடியோ! தமிழகத்தில் மீண்டும் மீண்டும் பரவுதே? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நறுக்
சென்னை: இணையத்தில் பரவிய பெண் வழக்கறிஞரின், அந்தரங்க வீடியோக்களை முடக்கம் செய்தாலும், தமிழகத்தில் மட்டும் எப்படி மீண்டும் மீண்டும் பரவி வருகிறது? என்று தமிழக சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசு இடையிலான ஒத்துழைப்பை, நீதிமன்றம் எதிர்பார்க்கிறது என்றும் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
பெண் வழக்கறிஞர் ஒருவர், தன்னுடைய கல்லூரி காலகட்டத்தில், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. அப்போது அவருடன் நெருக்கமாகவும் இருந்துள்ளார்.. அந்த வீடியோக்கள், போட்டோக்கள் திடீரென வெப்சைட்களில் பரப்பப்பட்டன.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வழக்கறிஞர், அந்த ஆபாச வீடியோக்களை நீக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவில் உள்ள 400 சட்ட விரோத இணைய தளங்களை முடக்கியது போல இந்த சட்ட விரோத இணையதளங்களையும் முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பெண் வக்கீலின் அந்தரங்க வீடியோ
இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், ஆபாச வீடியோக்களை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது... 70 க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள அந்த காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.. அத்துடன், வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்கவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது..
இந்நிலையில், இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.. அப்போது பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி வாதாடினார்.
அப்போது, இணையதளத்தில் வீடியோக்கள் முடக்கப்பட்ட போதிலும், தமிழகத்தில் 3 வெப்சைட்களில் அவை பரவி வருவதாகவும், புதிதாக ஒரு லிங்க் மூலமும் வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டு வருவதாகவும் மொத்தம் நான்கு 'லிங்க்'களில் வீடியோ பரவி வருவதாகவும் வாதிட்டார்.
நல்ல நல்ல வீடியோவை காணோம்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "வீடியோக்களை நீக்க உத்தரவிட்ட நிலையில், மும்பை, டெல்லி போன்ற இடங்களில், இந்த வீடியோக்களை பார்க்க முடிவதில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் எப்படி மீண்டும் மீண்டும் வெப்சைட்களில் பரவி வருகிறது?
நல்ல பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், இணையத்தில் இருந்து நீக்கப்படுகின்றன. ஆனால் மோசமான, ஆபாசமான வீடியோக்கள் மட்டும் வேக வேகமாக பரவி வருகிறது. இந்த வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில் உள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.
வீடியோ அப்லோடு
இதற்கு டிஜிபி தரப்பில் அரசு வழக்கறிஞர் வி.மேகநாதன், ''வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது என தெரியவந்துள்ளது. அவர்தான் வீடியோவை அப்லோடு செய்துள்ளார். ஆனால், அவரை அடையாளம் காண முடியவில்ல.. வழக்கில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தயாராக உள்ளது. தடய அறிவியல் துறை அறிக்கைக்கு காத்திருக்கிறோம்,' என்றார்.
அப்போது, மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.குமரகுரு ஆஜராகி, ''மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமைத்த குழு கூட்டம், செப்டம்பர் 2ம் தேதி நடக்க உள்ளது. அடுத்த விசாரணையின்போது, அறிக்கை தாக்கல் செய்ய, அவகாசம் அளிக்க வேண்டும். ஏற்கனவே வழங்கிய லிங்க்குகளில் பரவிய வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன' என்றார்.
ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி
மேற்கண்ட வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ''இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசு இடையிலான ஒத்துழைப்பை, நீதிமன்றம் எதிர்பார்க்கிறது..
காரணம், இது பாதிக்கப்பட்டவரின் கண்ணியம் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே மீண்டும் மீண்டும் பரவி வரும், பெண் வழக்கறிஞரின் வீடியோக்கள் இடம்பெற்ற, 4 வெப்சைட் லிங்க்குகளையும் முடக்க வேண்டும்" என்று அதிரடியாக உத்தரவிட்டார்.. அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 11ம் தேதிக்கும் நீதிபதி தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications