மிஸ்ஸானா மாட்டுவீங்க.. ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை! அரசு சொன்னத கேட்டீங்களா? வீட்டுக்கு ரெய்டு வரலாம்
சென்னை: ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் ஒன்றை தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. அது என்ன? விரிவாக பார்ப்போம்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட உள்ளது. கடந்த மாதம் தமிழ்நாடு அரசு இதனை பெற தகுதி வாய்ந்த பெண்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டது.

இதற்கான விண்ணப்ப பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பை மக்கள் கவனித்தில் கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்டு உல்ளதாவது, "பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 விண்ணப்பப் பதிவு முகாமில் முதல் 04.08.2023 88.34 இலட்சம் வரை நடைபெற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 அன்று தொடங்கி 16.08.2023 வரை நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட முகாமில் இதுவரை 59.86 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
உங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கையெழுத்துவதற்கு மேலே, கீழ்காணும் 11 உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டு உள்ளன.
"1. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற எனது ஆதார் எண், பயோமெட்ரிக் அல்லது ஒரு முறை கடவுச்சொல் (OTP) தரவை ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்புக்காக வழங்க நான் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறேன். 2. எனது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் இல்லை.
3. எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சதிற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் அல்ல. 4. எனது குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர் யாரும் இல்லை.
5. எனது குடும்பத்தில் மாநில அரசு, ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் யாரும் இல்லை. 6. எனது குடும்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தவிர) யாரும் இல்லை.
7. எனது குடும்பத்தில் யாரும் சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கவில்லை. 8. எனது குடும்பத்தில் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து (Annual turnover) சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் யாரும் இல்லை.
9. எனது குடும்பத்தில் முதியோர் ஓய்வூதியம் (OAP) விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை. 10. எனது குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட்டாக 5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் இல்லை.
11. விண்ணப்பத்தில் என்னால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை. தவறான தகவல்களைக் கொடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்றது கண்டறியப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிவேன்.
இந்த உறுதிமொழிகளில் இடம்பெற்றுள்ளபடி சரியான தகவலைதான் அளித்து இருக்கிறீர்களா? என்பதை அறியவே கள ஆய்வுக்காக வருவார்கள் என்று அரசு குறிப்பிட்டு உள்ளது. அதில் தவறான தகவல்களை நீங்கள் வழங்கி இருந்தால், 11 வது உறுதிமொழியில் இருப்பதைபோல் சட்ட நடவடிக்கை பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications