இங்கே பழுப்பு.. அங்கே பச்சை.. வானத்தில் தொடங்கிய "சண்டை".. தமிழ்நாடு வெதர்மேன் விடுத்த வார்னிங்!
சென்னை: வானில் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும் வறண்ட காற்றுக்கும் இடையிலான மோதல் தொடங்கிவிட்டது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் எதிர்பார்த்தபடியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி வேகமாக வலுவடைந்து வருகிறது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வேண்டும். மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பெரும்பாலும் நாளை வலுபெறக்கூடும், என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வறண்ட காற்று காரணமாக பாதிக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது இந்த தாழ்வு பகுதி சென்னை - நெல்லூர் பகுதியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த பகுதிக்கு செல்லும் வழியில் வறண்ட காற்று உள்ளது. இந்த வறண்ட காற்று காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமை குறையலாம். அதன் பலம் குறையலாம்.,

வானிலை
இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி செல்லும் திசை, அதன் வேகம், வலிமை ஆகியவை பாதிக்கப்படலாம். இதன் காரணமாக பெய்ய கூடிய மழையின் அளவும் பாதிக்கப்படலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனாலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி செல்லும் திசை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதனால் வரும் நாட்களில்தான் இந்த தாழ்வு பகுதியின் திசையை உறுதி செய்ய முடியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிரதீப் ஜான்
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் செய்துள்ள போஸ்டில், வானில் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும் வறண்ட காற்றுக்கும் இடையிலான மோதல் தொடங்கிவிட்டது. நீங்கள் இந்த இமேஜில் அதை பார்க்க முடியும். இதில் வறண்ட காற்று என்பது பழுப்பு நிறம், பச்சை நிறம் என்பது குளிர்ந்த காற்று. வறண்ட காற்று காற்றழுத்த தாழ்வு பகுதியை வெல்வதற்கு முன்பாக, குளிர்ந்த காற்று வடக்கு தமிழ்நாட்டை நோக்கி தள்ளப்படுகிறது.

மோதல்
அதோடு காற்றழுத்த தாழ்வு பகுதியும் எங்கேயும் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு உள்ளது. இரண்டு பக்கமும் தடுக்கப்பட்டு உள்ளது. இதனால் இரண்டு பக்கங்களிலும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் நகர முடியவில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், என்று கூறப்பட்டு உள்ளது. 20ம் தேதி செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
-
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications