காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடியில் சூப்பர் திட்டம்! சட்டசபையில் அறிவித்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.!
சென்னை: காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடியில் கல்லூரி மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
Recommended Video
கல்லூரி கட்டிடங்கள் அதிகளவில் கட்டப்பட்டு உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று இதனை அவர் பேரவையில் கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட்
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று நண்பகல் வரை 6 நாட்கள் நடைபெற்றது. பட்ஜெட் மீதான பதிலுரையின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்புகள் சிலவற்றையும் வெளியிட்டார். அதன்படி காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடியில் கல்லூரி மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கல்லூரி கட்டிடங்கள் அதிகளவில் கட்டப்பட்டு உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பொருளாதார அறிஞர்கள்
இதேபோல் தமிழக அரசுக்கு ஆலோசனை நல்கி வரும் பொருளாதார அறிஞர்கள் அடங்கிய குழு ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தங்குவதற்கும், வாகன எரிபொருள் செலவுக்கும் அரசு சார்பில் அளிக்கப்பட்ட தொகையை கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். ஆனால் அதற்குள் பொருளாதார அறிஞர்கள் குழுவுக்கு அரசு செய்த செலவுத் தொகை எவ்வளவு என எதிர்க்கட்சித் தலைவர் கேட்பதாக வேதனை தெரிவித்தார்.

ஒற்றைச் சாளரம்
மேலும் நிதித்துறையில் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவதற்கான சீர்த்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களுடன் மட்டும் ஒப்பிடாமல் தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முன் மாதிரியான மாநிலமாக திகழ வேண்டும் என்பதை இலக்காக கொண்டு முதல்வர் செயலாற்றி வருவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

முக்கிய அறிவிப்பு
நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்புகளில் காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடியில் கல்லூரி மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்படும் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏற்கனவே பள்ளிக்கல்விக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் ஒரு மெகா திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இன்று உயர்கல்விக்கு காமராஜர் பெயரில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications