கடன் வாங்காமல் குடும்ப தேவைகளை சமாளிக்க.. நிதிஅமைச்சர் பிடிஆர் சொல்லும் அட்வைஸ்! இதை ஃபாலோ பண்ணுங்க!
சென்னை : உலக சிக்கன நாளையொட்டி தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
உலக சிக்கன நாள் நாளை (அக்டோபர் 30ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில், ஒரு பகுதியை பாதுகாப்பான வழியில் சேமிப்பது சிறந்தது, முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்பப் பெற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பிடிஆர்
இதுகுறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் , "உலக சிக்கன நாள் அக்டோபர் 30.10.2022 அன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைவதுடன் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் 1985-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பணம் இருப்பது போல்
"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்" என்ற குறளில், ஒருவன் தனது செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாவிடில் அவன் வாழ்க்கை, செல்வம் இருப்பது போலத் தோன்றினாலும் செல்வம் இழந்து வாழ்க்கை கெடும் என்று திருவள்ளுவர் கூறியதோடல்லாமல் மனித வாழ்க்கையில் சேமிப்பின் முக்கியத்துவத்தை சிறப்பாக ஈரடிகளில் வியாக்கியுள்ளார்.

சேமிப்பு அவசியம்
சிறுகச் சிறுகச் சேமிப்பதன் மூலம் குடும்பத்திற்குத் தேவைப்படும் அவசரத் தேவைகளை, எளிதில் எதிர் கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவினங்களை கடன் வாங்காமல் மேற்கொள்ளலாம். ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில், ஒரு பகுதியை பாதுகாப்பான வழியில் சேமிப்பது தான் சிறந்தது. மக்கள் தங்களது சேமிப்புத் தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்பப் பெற முடியும்.

சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்
இந்த வகையில் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பானவை. தமிழக மக்கள் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து உயர்ந்திட இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

அஞ்சலகங்களில்
நாளை சிக்கன நாளையொட்டி அஞ்சலகங்களில் சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. எல்லா பிரிவினர், வயதினருக்கு ஏற்ற சேமிப்பு திட்டங்கள் 100 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. இதுவரை அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறாத மக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி எளிய முறையில் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகளைத் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications