சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று மாலைக்குள் கரை திரும்புங்கள்.. மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று மாலைக்குள் மீனவர்கள் கரை திரும்ப வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ

    சென்னை: ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:

    நேற்று தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் நிலவிவந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல்பகுதியில் நிலவுகிறது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.

    Fishermens go back to the shore by this evening, Meteorological Center alert

    மேலும் இது வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். பிறகு ஆந்திரா வடக்கு தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக வரும் டிசம்பர் மாதம் 15, 16 தேதிகளில் தமிழக கடற்கரை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    மீனவர்கள் டிசம்பர் 12ஆம் தேதி வங்கக் கடல் பகுதிகளுக்கும், டிசம்பர் 13ஆம் தேதி வங்கக்கடலில் மத்திய பகுதிகளுக்கும், டிசம்பர் 14ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும், டிசம்பர் 15ஆம் தேதி மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

    English summary
    Southeast Bengal Sea airflow Strengthening in 24 hours fishermen's go back to the shore by this evening Meteorological Center alert
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X