ஹெச் ராஜாவின் கந்தன் மலை ட்ரெய்லர்.. இமானுவேல் சேகரன், உடுமலை, திராவிட மாடல்.. பாருங்க
சென்னை: தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா, சினிமாவில் களம் இறங்கி உள்ளார். அவர் கந்தன் மலை என்ற படத்தில் தர்ம போராளியாக நடித்துள்ளார். வீரமுருகன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று இரவு வெளியாகியது. இந்த டிரைலரில் இமானுவேல் சேகரன், உடுமலை, திராவிட மாடல், திருப்பரங்குன்றம் மலை, கோவில் போன்ற விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் சில விஷயங்கள் சர்ச்சையை தொட்டு செல்கிறது.
தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் கோயில்கள், கடவுள் நம்பிக்கை போன்ற விஷயங்களில் தீவிர ஈடுபாடு உடையவர். அதேநேரம் திமுகவை ஆரம்ப காலம் முதலே கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில் திருப்பரங்குன்றம் விவகாரம் சர்ச்சையாக மாறியது. இந்த சூழலில் சினிமா துறையிலும் களம் இறங்கி, ஒரு படத்தில் நடித்துள்ளார். 'கந்தன்மலை' என்ற பெயரில் வீர முருகன் என்பவர் இயக்கி உள்ளார். சிவ பிரபாகரன் - சந்திரசேகர் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. அப்போது எச்.ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலை, கையில் ருத்ராட்ச மாலை அணிந்தபடி நிற்கும் காட்சி இடம் பெற்று இருந்தது. கந்தன் மலை' என்பது கடவுள் முருகனின் கோவில் இருக்கும் திருப்பரங்குன்றத்தை குறிக்கும். இதனைஅடிப்படையாக வைத்தே படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
கந்தன் மலை படத்தின் ட்ரெய்லரை பொறுத்தவரை முதல் காட்சியிலேயே இமானுவேல் சேகரனை கொன்றது முத்துராமலிங்கத்தேவரா என்று கேட்பதுடன், அவர் மீதே நாங்கள் எப்ஐஆர் போடவில்லையா என்று ஒரு காவலர் கேட்பதாக இருக்கிறது. அடுத்ததாக ஹெச் ராஜா கருப்பு உடையில், ருத்ராட்ச மாலை அணிந்தபடி ஜீப்பில் வருவதாக இருக்கிறது. அதேபோல் ஒரு காட்சியில் கிறிஸ்தவர்கள் கையில் தேவாலயங்களும், இஸ்லாமியர்கள் கையில் மசூதிக்களும் உள்ள நிலையில்,இந்துக்கள் கையில் ஏன் கோயில்கள் இல்லை என்று கேள்வி எழுப்புகிறார்.
சாதிய மோதல்களுக்கு திராவிட மாடல் காரணம் என்று குற்றம்சாட்டியும் சில காட்சிகள் வைக்கப்பட்டிருப்பது ட்ரெய்லர் இருக்கிறது. அதேபோல் உடுமலைப்பேட்டை ஆணவ கொலை விவகாரத்தில் அந்த பெண்ணுக்கு நடந்த திருமணம் பற்றியும் இந்த ட்ரெய்லரில் பேசப்படுகிறது. மண், பெண், மலையை காப்போம் என்பதாக கந்தன் மலை ட்ரெய்லர் இருக்கிறது. இந்த ட்ரெய்லருக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே கந்தன் மலை திரைப்படம் வரும் டிசம்பர் 19ம் தேதி தாமரை டிவியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications