Flashback 2021: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. ஆனந்த கண்ணீர் சிந்திய துர்கா, உதயநிதி!
சென்னை: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் முதல்முறையாக முதல்வராக பதவியேற்ற போது அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் மகன் உதயநிதி ஸ்டாலினும் ஆனந்த கண்ணீர் விட்டனர்.
Recommended Video
தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அவரது காலத்திற்கு பின்னர் மகன் ஸ்டாலின் முதல்வராக கட்சியினர் கடுமையாக உழைத்தனர். இதற்கு வெள்ளோட்டமாக அமைந்தது 2019இல் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 20 இடங்களில் வெற்றி.
ஸ்டாலினை முதல்வராக்குவோம் என கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு முறையும் சூளுரைத்த போதெல்லாம் ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசியே இல்லை, அவரது ஜாதகத்தில் அது போன்ற அம்சங்கள் இல்லை என்றே எதிர்க்கட்சியினர் ஏளனம் செய்தனர்.

உடைத்தெறிந்த
ஆனால் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு செயலில் எதிர்க்கட்சிக்கு பதிலடிக் கொடுத்தார் ஸ்டாலின். இதன் எதிரொலியாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வென்றது. அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சியை பிடித்தது. பெரும்பான்மை பலம் இல்லாததால் மைனாரிட்டி அரசு என்றே ஜெயலலிதா விமர்சனம் செய்துவந்தார்.

பெரும்பான்மை
ஆனால் இந்த முறை திமுக பெரும்பான்மை பலத்தை காட்டிலும் கூடுதலாக வென்றது. இதையடுத்து மே 7ஆம் தேதி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்த போது "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.." என கூறிவிட்டு தோள்களை தூக்கிவிட்டு கம்பீரம் காட்டினார் ஸ்டாலின்.

மனைவி துர்கா
இதை பார்த்த ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினும் மகன் உதயநிதி ஸ்டாலினும் ஆனந்த கண்ணீர் சிந்தினர். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என பல கோயில்களில் பூஜை புனஸ்காரங்களை நம்பிக்கையுடன் மேற்கொண்டவர் துர்கா. மேலும் மற்றவர்கள் ஏளனம் பேசிய நிலையில் இன்று முதல்வராக பதவியேற்பதை பார்த்த போது துர்காவுக்கு துக்கம் தொண்டையை அடைத்து அது வெளியே மகிழ்ச்சியான கண்ணீராக வந்துவிட்டது.

நண்பேன்டா உதயநிதி
அது போல் உதயநிதிக்கும் கண்ணீர் வந்துவிட்டது. துர்காவை உதயநிதி தேற்ற, உதயநிதியை மனைவி கிருத்திகா தேற்ற... இவ்வாறாக இருந்தது உணர்ச்சி பெருக்கு! அது போல் உற்ற நேரத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன் என்பதற்கேற்ப உதயநிதியின் சிறு வயது நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட போதும் உதயநிதிக்கு ஆனந்தத்தில் கண்ணீர் வந்தது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications