Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்னி பஸ்களில் உல்லாசம்.. சென்னை - கோவை உள்பட 4 ரூட்களை குறிவைத்த விபசார கும்பல்! திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து கோவை, ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் ஆணுறைகள், மதுப்பாட்டில்கள் சீட்டில் கிடப்பதோடு, விபசார கும்பல் இந்த 4 ரூட்டுகளை குறிவைத்து முன்பதிவு செய்து ஓடும் பஸ்சில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதாக திடுக்கிடும் தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் விமானம், ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். பணம் படைத்தவர்கள் விரைந்து செல்லும் வகையில் விமானங்களில் செல்லும் நிலையில் ஏழ்மையானவர்கள் குறைந்த செலவில் ரயில்களில் பயணிக்கின்றனர்.

coimbatore omni bus

அதேபோல் பலரும் அரசு பஸ், தனியார் பஸ்களில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக படுக்கை வசதி கொண்ட பஸ்களில் பலரும் பயணித்து வருகின்றனர். இந்த வேளையில் பஸ் பயணத்தின்போது பயணிகள் உடலுறவில் ஈடுபடும் சம்பவங்கள் குறித்து கண்டக்டர்கள், டிரைவர்கள் அடிக்கடி பேட்டியளித்து இருப்பதை நாம் பார்த்து இருப்போம்.

இந்நிலையில் தான் சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் செல்லும் பஸ்களில் பயணிகள் போர்வையில் படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களில் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து உடலுறவு வைத்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரவில் முனங்கல் சத்தம் கேட்கும் குறிப்பிட்ட படுக்கையில் இருந்து மறுநாள் கிடக்கும் ஆணுறைகள், மதுப்பாட்டில்கள் கிடப்பது அவர்கள் சட்டவிரோத செயலில் ஈடுபடுவதற்கு சாட்சிகளாக அமைந்துள்ன.

இதுதொடர்பாக தற்போது Anti Vice Squad of Police எனும் விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு ஆம்னி பஸ்களின் நிர்வாகம் சார்பில் புகார்கள் சென்றுள்ளன. இந்த புகார் பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் தான் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது பஸ்களில் விபசாரம் நடப்பது தெரியவந்துள்ளது. அதாவது உடல் சுகத்தை தேடுவோர் லாட்ஜ்கள், ஸ்பாக்களுக்கு சென்றால் போலீஸ் ரெய்டில் சிக்கலாம். இதில் இருந்து தப்ப ஒரு கும்பல் ஆம்னி பஸ்களை பயன்படுத்த தொடங்கி உள்ளது.

ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல்.. நடிகை பார்வதி பரபர அறிக்கை.. ஆதரவாளர்களுக்கு நன்றி என உருக்கம்


அதாவது விபசாரம் நடத்தும் கும்பல், வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பேசுகிறது. அந்த வாடிக்கையாளர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கும், அவர் தேர்வு செய்யும் பெண்ணுக்கும் சேர்த்து ஆம்னி பஸ்களில் சேர்த்து புரோக்கர்கள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அதன்பிறகு கணவன் - மனைவி என்ற பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அவர்கள் பஸ்களில் பயணித்து உடலுறவு வைத்து கொள்கின்றனர்.

படுக்கை வசதி பஸ்களில் ஸ்கீரின் வசதி உள்ளதோடு, போலீஸ் தொல்லை இருக்காது என்பதால் அவர்கள் இதனை தேர்வு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை ஒரு ட்ரிப்பிற்கு குறிப்பிட்ட நபரிடம் இருந்து விபசாரம் நடத்தும் கும்பல் வசூலிக்கிறது. இந்த பணப்பரிமாற்றம் என்பது யுபிஐ மூலம் நடக்கிறது. அதோடு விபசார புரோக்கர்கள் வாடிக்கையாளர்களுக்கு பெண்களின் போட்டோக்களை செல்போன் மூலம் பகிர்கின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்.. அரசு ஆசிரியர்கள் உள்பட 15,000 பேர் ஊதியத்துக்கு காத்திருப்பு.. ஏன்?


அதில் வாடிக்கையாளர் ஒரு பெண்ணை தேர்வு செய்யும் பட்சத்தில் பஸ்களில் இருவருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து இந்த விவகாரம் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னையில் இருந்து கோவை, ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்களில் அதிகளவில் இந்த சம்பவங்கள் நடக்கிறது.

மேலும் இந்த சம்பவங்களை தடுப்பது என்பது தனியார் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் மற்றும் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. ஏனென்றால் இந்த செயலில் ஈடுபடுவோர் சிக்கினாலும் கூட காதலர்கள், கணவன் - மனைவி என கூறுகின்றனர். இது பஸ்களின் பணியாற்றுவோர் மற்றும் போலீசாருக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் இதுபோன்ற சம்பவங்கள் என்பது பிற பஸ் பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+