சென்னையில் ஓட்டல்களில் சாப்பிட போறவங்களுக்கு ஷாக் நியூஸ்.. அடியோடு மாறப்போகும் விலை
சென்னை: சென்னையில் மளிகை பொருட்கள், காய்கறி விலை கடுமையாக உயர்ந்துளளதால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளார்கள். இனி ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை இப்போது உள்ளதை விட 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக தக்காளி விலை தாறுமாறாக விற்பனை ஆகிறது. ஒரு கிலோ தக்காளி 120 முதல் 130 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) விலை 200 ரூபாயை தாண்டிவிட்டது. இது தவிர இஞ்சி மற்றும் பூண்டின் விலையும் நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துவிட்டது.

இது தவிர சீரகம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு விலையும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இப்படி மளிகை பொருட்கள் விலையும், காய்கறிகள் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டதால் பொதுமக்கள் வழக்கத்தைவிட குறைந்தது 1000 ரூபாய் வரை மாதம் பட்ஜெட்டில் அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறம் எனில், ஓட்டல் மற்றும் உணவகங்கள் நடத்துபவர்களும் இந்த கடுமையான விலை உயர்வால் அவதிப்பட்டு வருகிறார்கள். விலைவாசி அதிகரித்துள்ளதால் தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் கொடுத்தால் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.
தொடர்ந்து விலை அதிகரித்தபடியே இருப்பதால் ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளனர். விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வரும் என்று சொல்கிறார்கள்.

ஏற்கனவே மின்சாரத்திற்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையும், காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
மின் கட்டணத்தை ஒரே மாதிரி வசூலிக்க வேண்டும் என்றும் காய்கறியை சேமித்து வைக்கும் குளிர்பதன சேமிப்பு கிடங்குகளை அதிகரித்து, தற்போது உள்ள தட்டுப்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை இம்மாத இறுதிக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை குறைந்தது 5 முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications