Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“கடவுள் மாதிரி அய்யா ஸ்டாலின்”- மாதவரம் நரிக்குறவ மக்கள் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல ஆண்டுகாலமாக மின்சாரத்தையே கண்களில் பார்க்காத மாதவரம் நரிக்குறவர் மக்கள், முதன்முறையாக மின்சார ஒளியை தங்களின் வீடுகளில் பெற்றிருக்கிறார்கள்.

"இராத்திரி முழுக்க பாம்பு, பல்லி தொல்லையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். கடவுள் மாதிரி வந்து எங்களைக் காப்பாற்றி இருக்கிறார் ஸ்டாலின் அய்யா. லைட் போட்டு கொடுத்ததற்காக அவருக்குக் கோடி புண்ணியம்" எனக் கை எடுத்து வணங்குகிறார் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த லக்ஷ்மி.

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.

தங்களது நரிக்குறவர் காலனிக்கு மின்சாரம் வந்த கதையைப் பற்றி மகிழ்ச்சியாக லக்ஷ்மி பேசப் பேச அவர் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பை விடப் பிரகாசமாக ஒளிர்கிறது.

இது குறித்து மாதவரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சு. சுதர்சனம், "கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எதிர்க்கட்சி வரிசையில் அமரக் கூடிய சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அப்போது என் தொகுதிக்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்தேன். அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. நான் சொன்னதில் ஒன்றுகூட நடக்கவில்லை.

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.

ஆனால், ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இரண்டு முறை ஆய்வுக்கூட்டம் என் தொகுதியில் நடைபெற்றுள்ளது.

அதன்பிறகு மாதவரத்தில் மட்டும் 100கேவி மின்மாற்றிகள் இதுவரை 87 மாற்றப்பட்டுள்ளன. அதேபோல 250 கேவி மின்மாற்றிகள் மொத்தம் 36 மாற்றப்பட்டுள்ளன.

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.

மேலும் இதுவரை 22 கிலோமீட்டர் தூரத்திற்கு புதியதாக மின் கம்பிகளை மாற்றி அமைத்துள்ளோம். எங்கள் ஆட்சியில் 352 பழுதடைந்த மின் கம்பங்களை இவரை மாற்றி உள்ளோம்.

இத்தனை மாற்றங்களையும் உடனடியாக செய்து கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு என் சார்பாகவும் என் தொகுதி சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.

இதை எல்லாவற்றையும்விட ஒரு சிறந்த காரியத்தை முதல்வர் ஸ்டாலின் செய்துகொடுத்துள்ளார். எனது தொகுதியில் உள்ள நரிக்குறவர்களுக்காக புதியதாக 78 மின்கம்பங்களை அமைத்து, தனியே ஒரு மின்மாற்றியை வைத்து மொத்தம் 150 குடும்பங்களுக்கு மின் இணைப்பை வழங்கியுள்ளார். இது சமூகநீதி ஆட்சி என்பதற்கு இதைவிடச் சான்று தேவையா?

இத்தனைக் காலம் மின்சாரத்தையே கண்களில் பார்க்காத அந்த விளிம்புநிலை மக்கள் இன்று புதிய வாழ்வைப் பெற்றுள்ளனர்.புதை தண்டுவடம் போடப்பட வேண்டும் எனச் சென்ற அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைத்தேன்.

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.

ஆனால் நடக்கவில்லை. எங்கள் ஆட்சியில் அதே கோரிக்கை ஏற்கப்பட்டு 32 கோடி ரூபாய் செலவில் பணிகள் அனைத்து இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளன.

மேலும் இதே பணியை விரிவாக்கவேண்டி 300 கோடி ரூபாய் செலவில் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது" என்கிறார்

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் கே. வெங்கடேசன். அவர் நம்மிடம் பேசும்போது "இந்தப் பகுதியில் உள்ள 27வது வட்டம் என் கட்டுப்பாட்டுக்குள்தான் வருகிறது. இங்கே மொத்தம் 23 ஆயிரத்து 400 பேர் உள்ளனர்.

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.

எனது பகுதியில் 30% வரை மின் கம்பிகள் பூமிக்கு அடியில் செல்லக்கூடியவையாக உள்ளன. 70% வரை மேல்நிலை கம்பிகளாகப் போடப்பட்டு உள்ளன. இந்த ஆட்சிக்காலத்தில் இதுவரை மழை மற்றும் புயல் பாதிப்புகளால் 105 மின் கம்பங்களை புதியதாக மாற்றி உள்ளோம்.

பத்மகிரி நகர், மூலச்சத்திரம், ஒத்தவடை பெருமாள் கோயில் தெரு என மொத்தம் 4 இடங்களில் இதுவரை 100 கேவி மின்மாற்றிகளை அமைத்துத் தந்துள்ளோம்.

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.

இந்தப் பகுதிகளில் பல ஆண்டுகளாக அதிக மின் அழுத்தம், குறைந்த மின் அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருந்துவந்தன. அதைச் சரி செய்வதற்காக இந்தப் புதிய மின்மாற்றிகளை அமைத்துக் கொடுத்தோம். ஆகவே இப்போது பழைய பிரச்சினைகள் இல்லை.

மேலும் 7 இடங்களில் உள்ள பழைய மின்மாற்றிகளின் தரத்தை உயர்த்தி உள்ளோம். அதேபோல 125 மின் இணைப்பு பெட்டிகளின் உயரத்தை அதிகப்படுத்தி உள்ளோம். மழைக் காலங்களில் மின் இணைப்பு பெட்டிகளைச் சுற்றி வெள்ளநீர் தேங்குவதால் மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டி வருகிறது.

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.

ஆகவே, அவை அனைத்தையும் 3 அடி உயரப்படுத்திக் கொடுத்துள்ளோம். இப்போது மழைக் காலங்களிலும் மின்தடை இல்லாமல் மக்கள் மின் சேவையைப் பெற்றுவருகின்றனர்.

இவை இல்லாமல் பல இடங்களில் மின்சாரம் செல்லக் கூடிய மின் கம்பிகளின் தரத்தையும் உயர்த்தி புதியதாக அமைத்துள்ளோம். ஃபீடர் லைன் ஒன்றை அமைக்கும் வேலையும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது" என்கிறார்

இந்த மாதவரம் பகுதியில் ஜூஸ் கடை நடத்திக் கொண்டிருக்கும் வேலு, "இந்த ஆட்சி வந்த பிறகு எங்கள் பகுதியில் ஒரு டிரான்ஸ்ஃபார்மர் மாற்றி இருக்கிறார்கள்.

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.

அதேபோல் ஒரு புதிய ஆர்.எம்.யு வைத்திருக்கிறார்கள். இவற்றை மாற்றிய பிறகு மின்தடை, குறைந்த அழுத்த மின்சார பிரச்சினை என எந்தப் பிரச்சினைகளும் இல்லை" என்கிறார்

இதே மாதவர உபக் கோட்டத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வரும் அருணாச்சலம், "இந்த மாதவரம் உபக் கோட்டத்தில் மொத்தம் 5 உதவிப் பொறியாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. 3 துணைமின் நிலையங்களும் உள்ளன. எங்கள் பகுதியில் 67 ஆயிரம் நுகர்வோர்கள் உள்ளனர்.

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.

இந்த 2 ஆண்டுகளில் மட்டும் புதியதாக 76 மின்மாற்றிகளை அமைத்துள்ளோம். மேலும் 25 மின்மாற்றிகளை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்தத் தொகுதியில் ஆர்.எம்.யு என்பதே இல்லாமல் இருந்து. இப்போதுதான் வந்துள்ளது. முதற்கட்டமாக 25 ஆர்.எம்.யுக்களை அமைத்துள்ளோம்.

இந்தப் பகுதியில் மழைவெள்ள பிரச்சினை இல்லை. ஆகவே 10% அளவுக்குத்தான் பில்லர் பாக்ஸ் உள்ளன. அவை அனைத்தும் உயரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பொன்னியம்மன் கோயில் பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேங்கும் புகார் இருந்தது. அந்தப் பகுதியிலும் 3 அடி வரை அனைத்து மின் இணைப்புப் பெட்டிகள் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன" என்கிறார்

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.

மேலும் தொடர்ந்து பேசிய இவர், "மெட்ரோ ரயில் சேவை இந்தப் பகுதியில் வர உள்ளதால் இரண்டு துணைமின் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் அந்த இரு திட்டமும் நிறைவேற்றிவிட்டால் மின் அழுத்தம் சார்ந்த எந்தப் பிரச்சினைகளும் இருக்காது" என்கிறார்

அடுத்துப் பேசியவர் தேவராஜ். இவர் உதவிப் பொறியாளராகச் சோழவரம் வட்டத்தில் பணியாற்றி வருகிறார். அவர், "எங்கள் வட்டத்தில் மொத்தம் 7 பஞ்சாயத்துகள் இருக்கின்றன.

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.

முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளுக்காக அறிவித்த 1.50 லட்சம் இலவச மின் இணைப்புகள் திட்டத்தில் மட்டும் 15 விவசாயிகளுக்கு புதிய இணைப்பு வழங்கி உள்ளன. ஆங்காடு பகுதியில் குறைந்த மின் அழுத்தப் பிரச்சினை இருந்தது. அதற்காக ஒரு புதிய மின்மாற்றியை அமைத்துத் தந்துள்ளோம்" என்கிறார்

For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.
For the first time, the people of Narikuravar living in Madhavaram Assembly constituency have got electricity in their homes.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+