மருத்துவமனையில் ஜெ. மயக்க நிலையில் இருந்தார்... ஜனாதிபதிக்கு வித்யாசாகர் ராவ் அனுப்பிய கடிதம் லீக்!
சென்னை : அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதாவை முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தாரா என்ற உண்மையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 22, 2016ல் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக அதிமுக பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண காய்ச்சல் தான் 3 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. பின்னர் காய்ச்சல் சரியாகிவிட்டது மேலும் சில நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உள்ளே என்ன நடக்கிறது உண்மை நிலை என்ன என்பது தெரியாமல் தொண்டர்கள் அல்லாடிப் போனார்கள். இந்நிலையில் தான் அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்தார். ஜெயலலிதாவை தூரத்தில் இருந்து பார்த்ததாக அப்போது அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவை மருத்துவமனையில் வித்யாசாகர் ராவ் சந்தித்தாரா என்று ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் கேள்வி எழுப்பி இருந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் ஆளுநர் மாளிகைக்கும் மருத்துவமனைக்குமான தொடர்பு எப்படி இருந்தது. ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டதா என்பன உள்ளிட்ட 6 கேள்விகளை கடந்த 19ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு விசாரணை கமிஷன் அனுப்பி இருந்தது.
இதற்கு ஆளுநர் ஜனாதிபதிக்கு அக்டோபர் 6, 2016ல் அனுப்பிய கடிதத்தின் நகல் மற்றும் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் டிசம்பர் 7, 2016ல் அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்களோடு 6 கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 6ல் ஆளுநர் எழுதிய 3 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்த போது அவர் மயக்க நிலையிலேயே இருந்தார் என்று வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரைப் பார்த்து ஜெயலலிதா கையசைத்தார் என்று அப்போது கூறுப்பட்ட நிலையில் தற்போது ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்ததாக குறிப்பிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications