கலைஞரும் எடப்பாடியும் ஒன்னா? சரித்திரத்த திருப்பி பாருங்க! ‘இதுதான்’ நல்லது.. கேசி பழனிசாமி ஐடியா!
சென்னை: எடப்பாடி பழனிசாமியை கலைஞருடன் ஒப்பிடுவது தவறு எனவும், 2026 சட்டமன்ற தேர்தல் தனிப்பட்ட முறையில் அவருக்கும் , அதிமுக என்கிற கட்சிக்கும் எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து நாங்கள் முன்னெடுத்துள்ள ஒருங்கிணைப்பு முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து வலிமையான அதிமுகவை கட்டமைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறுண்டு கிடக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதல் அந்தக் கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல், அதற்குப் பிறகு மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.
2024 மக்களவைத் தேர்தலிலும் 40க்கு 40 என தமிழகம் புதுச்சேரியில் அதிமுக மண்ணை கவ்வியது கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனி அணிகளாகவும் கட்சிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணித்து விட்டனர், அதிமுக தலைமையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
அதேபோல இத்தனை நாள் கட்சிக்காக தான் ஒதுங்கி இருந்தேன் இனிமேல் பொறுத்துக் கொள்ள முடியாது என சசிகலாவும் அறிக்கை விட அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால் யாருக்கும் கட்சியில் இடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் சிலர் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற ஒன்றை ஆரம்பித்து இருக்கும் நிலையில் அதனையும் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்தார்.

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் தனிப்பட்ட முறையில் அவருக்கும் , அதிமுக என்கிற கட்சிக்கும் எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து நாங்கள் முன்னெடுத்துள்ள ஒருங்கிணைப்பு முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து வலிமையான அதிமுகவை கட்டமைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என்கிற போர்வையில் திமுக ஆட்சி தொடரவேண்டும் என்று விரும்புகிறவர்கள்.

ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமியை கலைஞருடன் ஒப்பிட்டு " பல தோல்விகளை கண்டபிறகும் வென்றார்" என்று கூறுகிறார்கள். அந்த ஒப்பீடு தவறு. அண்ணா மறைந்த பிறகு 1969-ல் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 1971 சட்டமன்ற தேர்தலில் அவர் தலைமையிலான அன்றைய திமுக வென்று ஆட்சி அமைத்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, அப்போதையை முதலமைச்சராக இருந்த அம்மா ( ஜெயலலிதா) மறைவுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்று அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். கலைஞர் அவர்கள் 1977 - 1987 வரை வனவாசம் சென்றுவிட்டார்.
அதே போல தான் ஸ்டாலின் அவர்களுக்கும் 2011 - 2021 வரை ஒப்பிடுகிறார்கள். அந்த இரண்டிலும் 8 முறை அவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். அதன் பிறகு வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை 10 தோல்விகளை பெற்றிருக்கிறார். குறைந்தபட்சம் 2026 சட்டமன்ற தேர்தல் தனிப்பட்ட முறையில் அவருக்கும், அதிமுக என்கிற கட்சிக்கும் எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து நாங்கள் முன்னெடுத்துள்ள ஒருங்கிணைப்பு முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து வலிமையான அதிமுகவை கட்டமைக்க வேண்டும்.
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications