தனியார் பள்ளிகளில் வசூல்.. முத்துக்குமார் திடுக் வாக்குமூலம்.. சிக்கலில் அன்பில் மகேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகளில் பாதுகாப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்காக, கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.400 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அன்பில் மகேஷை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு எதுவும் தெரியாது என அன்பில் மகேஷ் கூறிவந்தார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ தனியார் பள்ளிகளிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்தோம் என காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் அன்பில் மகேஷுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை தூசி தட்டி வருகிறார்கள். கே.என். நேரு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் நிறைய மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. முக்கியமாக தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி, ரூ.400 கோடிக்கு மோசடி நடந்ததாக கூறப்பட்டது.

former-dmk-mla-muthukumar-school-confession-gave-shock-about-anbil-mahesh

அன்பில் மகேஷ் வழக்கு

இதுதொடர்பாக திமுக நிர்வாகி அரசக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் பெற்ற வாக்குமூலம், தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த வாக்கு மூலங்கள் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாருக்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் முத்துக்குமார் தலைமறைவானார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முத்துக்குமாரை கைது செய்தனர். அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தார்கள். அதில் முத்துக்குமார் பல திடுக்கிடும் தகவல்கள் வாக்குமூலமாக அளித்துள்ளார் என கூறப்படுகிறது. அதில், "சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் எனக்கு தனி அறை இருந்தது. அரசு வாகனமும் ஒதுக்கப்பட்டது. ஆசிரியர்கள் அதிகாரிகளுடனான தொடர்பு விரிவடைந்தது.

பள்ளிகளில் கோடிக்கணக்கில் வசூல்

ஏற்கனவே அன்பில் மகேஷிடம் இருந்த செல்வாக்கால், தனியார் பள்ளி நிர்வாகிகள் என்னிடம் நெருங்கினார்கள். தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர, பணம் வசூல் செய்தோம். தனியார் பள்ளிகளுக்கு வழங்கிய அங்கீகாரம் 20 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அரசக்குமாரும், நானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்த தனியார் பள்ளிகளின் பட்டியலை சேகரித்தோம்.

விளையாட்டு மைதானம் இல்லாத, கட்டிடங்கள் கட்டி முடிக்காத தனியார் பள்ளிகளின் விபரங்களையும் திரட்டினோம். எங்கள் திட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அதிகரிகளும் உதவினர். புகார்கள் இருந்த தனியார் பள்ளிகளை மிரட்டினோம். அரசக்குமார் மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தினார். அதில் பேசி கோடிக்கணக்கில் வசூல் செய்தோம். இது அன்பில் மகேஷுக்கு தெரியும். அரசில் செல்வாக்கு இருந்ததால் எந்த தடையும் வரவில்லை" என்றார்.

தீவிரமடையும் விசாரணை

முத்துக்குமாருக்கு வருகிற 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசக்குமார், முத்துக்குமாரிடம் பெரிதாக பழக்கமில்லை. எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என்பதையே அன்பில் மகேஷ் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். இந்நிலையில், முத்துக்குமாரின் வாக்குமூலம் அன்பில் மகேஷுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அன்பில் மகேஷிடம் விசாரணையை தீவிரப்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+