பாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் திறப்பு - 500 தொழிலாளர்களுக்கு மட்டும் அழைப்பு
கடந்த மாதம் மூடப்பட்ட பாக்ஸ்கான் தொழிற்சாலை இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 500 தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஊழியர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட பாக்ஸ்கான் தொழிற்சாலை இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 தொழிலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வர உள்ளதால் குறைவான தொழிலாளர்களே பணிக்குத் திரும்பியுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் பகுதியில் ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை இயங்கி வருகிவருகிறது.

தரமற்ற உணவு
இந்த ஆலையில் 17ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சுற்றியுள்ள தொழிலாளர்கள் பலர் இந்த ஆலையை நம்பியே உள்ளனர். வெளியூர்களில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் பூந்தமல்லி, ஒரகடம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலை நிர்வாகம் விடுதியில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து இருந்தனர்.

விஷமான உணவு
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி பெண் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உணவு விஷமானதால் சுமார் 250 ஊழியர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதில் சில பெண்கள் குறித்து வதந்தி பரவியது. இதையடுத்து பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி நள்ளிரவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மூடப்பட்ட ஆலை
விடிய விடிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் டிசம்பர் 18ஆம் ஃபாக்ஸ்கான் ஆலை மூடப்பட்டது. ஆலை நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பாக்ஸ்கான் தொழிற்சாலை 12ஆம் தேதி முதல் செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை கூறி இருந்தார். அதன்படி இன்று முதல் பாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

500 தொழிலாளர்களுடன் இயங்கும் ஆலை
முதற்கடமாக 500 தொழிலாளர்களை கொண்டு தொழிற்சாலை இயங்க உள்ளதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. படிப்படியாக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஊழியர்களின் பாதுகாப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். அனைத்து தொழிலாளர்களையும் பணிக்கு அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதோடு தொழிலாளர்களுக்குத் தேவையான தங்கும் விடுதிகளையும் அடிப்படை வசதிகளையும் பாக்ஸ்கான் நிர்வாகமே செய்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications