அடித்து தூக்கும் தமிழ்நாடு.. தேடி வரும் பிரம்மாண்ட நிறுவனம்? வாயை பிளக்க போகும் மற்ற மாநிலங்கள்
சென்னை: மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தில் இருக்கும் நிலையில் முக்கியமான நிறுவனம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர தொழில்துறை அமைச்சகம் தீவிரமாக முயன்று வருகிறது.
2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கடந்த சில நாட்களுக்கு முன் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அவர் தனது உரையில், தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும். கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.
முக்கியமாக இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.
அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது.
ஓலா பைக்: ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் ஓலா முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பவரில் இயங்கும் பைக் ஆகும். ஓலாவை தொடர்ந்து இ வாகனங்களின் உற்பத்தி தமிழ்நாடு நோக்கி திரும்ப தொடங்கி உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
நிசான் நிறுவனம்: இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் ₹5300 கோடி முதலீடு செய்ய நிசான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. நிசான் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருக்கும் நிசான் நிறுவன ஆலை விரிவுபடுத்தப்பட உள்ளது. முன்பு உள்ள ஆலையில் எஞ்சின் கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு வந்தன. தற்போது இங்கே புதிய எலக்ட்ரானிக் கார் உருவாக்க ஆலை அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய நிசான் நிறுவனத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 5,300 கோடி மதிப்பில் முதலீடு செய்யப்படுவதால் 2,000 பேருக்கு சென்னையில் வேலைவாய்ப்பு உருவாகும்.
அதோடு ஆர் அண்ட் டி ஆராய்ச்சிகளும் இங்கே மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கே உற்பத்தி செய்யப்படும் நிசான் எலக்ட்ரிக் வாகனங்கள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்படும். நிசானின் எலக்ட்ரிக் வாகனங்கள் சென்னையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ்கான்: இந்த நிலையில்தான் ஆப்பிள் நிறுவனமான பாக்ஸ்கான் நிறுவனம் இ மின்சார வாகனங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவில் அந்த நிறுவனம் தொழிற்சாலையை தொடங்க உள்ளது.
இது தொடர்பாக தீவிர ஆலோசனைகளை அந்த நிறுவனம் செய்து வரும் நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடாகவுடன் போட்டி போட்டு தமிழ்நாட்டின் இதன் தொழிற்சாலையை தொடங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு தொழிற் துறை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விரைவில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்புகள் உள்ளன.
-
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications