நிலப்பட்டா வருது.. சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் சர்ப்ரைஸ்.. இலவச வீட்டுமனை யாருக்குன்னு பாருங்க
சென்னை: இலவச வீட்டுமனைப்பட்டா குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.. சென்னையின் ஒட்டியம்பாக்கம் பகுதி மக்களுக்காகவே, திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் இந்த மகிழ்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
சென்னையில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு, மக்களை வரவிடாமல் தமிழக அரசு தடுத்துவிட்டதாக தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

புகார்: இந்த குற்றச்சாட்டுக்கு, அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் காட்டமாக பதிலளித்திருந்தார்..
"இது மக்களாட்சி. ஒரு காலமும் அப்படி நடக்காது.. பாஜகவை பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும். முக்கியமாக தென் சென்னை மக்களுக்கு பாஜகவை பற்றி நல்லாவே தெரியும். வெள்ளத்தின்போது மக்களுடன் பாஜக நிற்கவில்லை. அதனால் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு மக்களும் செல்லவில்லை... தமிழக அரசு இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் தலையிடுவதில்லை.
பிரதமர் மோடி இங்கு வந்து சென்றதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை... எந்த மாற்றமும் நடக்காது.. அவர் ரோடு ஷோ பண்ணலாம்... ஆனால், ரியல் ஆக்ஷன் ஹீரோ எங்கள் முதல்வர் ஸ்டாலின்தான்..
ஜெயவர்தன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தினமும் எதையாவது ஒரு கற்பனை கதையை பேசிவருகிறார். சென்னை வெள்ளத்தின்போது தென் சென்னை மக்களுக்கு உணவளிக்கப்படவில்லை என்று சொல்கிறார்..
ஆனால், சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, பள்ளிகள், சமுதாய நலக்கூடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக் தங்கவைக்கப்பட்டனர்... ஜேசிபியில் சென்று மக்களுக்கு தண்ணீர், பால் பாக்கெட்டுகள் தரப்பட்டது.. குற்றச்சாட்டு சொல்றதுக்கு எதுவுமே இல்லாவிட்டால், கதை கட்டுவதுதான் ஜெயவர்தனின் வழக்கம்" என்றார் தமிழச்சி தங்கபாண்டியன்.
தென்சென்னை: இதற்கு பிறகு, தென் சென்னை மக்களவை தொகுதிக்குள்பட்ட பெரும்பாக்கம் முதல்நிலை ஊராட்சி பகுதியில் தொடங்கி மேட்டுத்தெரு, காந்தி தெரு, பாரதி வித்யாலயா பள்ளி, நேதாஜி தெரு, ஒட்டியம் பாக்கம், சித்தாலாம்பாக்கம் ஆகிய பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் ஓட்டு சேகரித்தார்.. அப்போது, செய்தியாளா்களிடம் அவர் சொன்னதாவது:
ஒட்டியம்பாக்கம் பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாகவே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வேண்டுகோள்களை விடுத்து வருகிறார்கள்.. இது தொடா்பாக முதல்வா் ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் அதிரடி: இந்தக் குழுவில், ஒட்டியம்பாக்கம் பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான முதல்கட்ட பேச்சுவாா்த்தையம் நடந்துமுடிந்துள்ளது.. அதனால், இந்த தோ்தல் முடிந்ததுமே, இந்தப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்... திமுக ஆட்சியில்தான் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது" என்றாா் தமிழச்சி தங்கபாண்டியன்.












Click it and Unblock the Notifications