இன்னோவா காரும், இடியாப்பமும்.. நாஞ்சில் சம்பத்துக்கு தவெகவில் பெரிய பதவி இதுவா? விஜய்க்கு செம லாபம்
சென்னை: கட்சி ஆரம்பித்த வெறும் 2 வருடங்களிலேயே இத்தனை சீரியர்கள் தவெகவுக்கு வருவது ஒரு பலம்தானே? இப்போதைக்கு கட்சிக்கு ஒரு மூத்த பேச்சாளர் தேவைப்படும் நிலை உள்ளது.. நாஞ்சில் சம்பத் பேச்சால், தவெகவின் கூட்டங்கள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தன்னுடைய கணிப்பை வெளிப்படுத்தி உள்ளார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "திராவிடக் கட்சிகளின் மூத்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத், விஜய்யை சந்தித்து சால்வை அணிவித்து தவெகவில் இணைந்துவிட்டார்.. இதற்கு பல விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன..

இன்னோவா காருக்கும், இடியாப்பத்துக்கும் விலை போகுபவர் நாஞ்சில் சம்பத் என்று கமெண்ட்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்போது என்ன, நாஞ்சில் சம்பத்துக்கு ஹெலிகாப்டர் தரப்போறாரா விஜய்? என்று கேட்டு வருகிறார்கள் .
நாஞ்சில் சம்பத்
விஜய் ஹெலிகாப்டர், கார் எது வேண்டுமானாலும் தரட்டுமே.. ஆனால், விமர்சனம் உள்ளவரை பற்றி எதுக்காக பேச வேண்டும்? நாஞ்சில் சம்பத் ஒரு சிறந்த, சுவாரஸ்யமான பேச்சாளர்... அந்த பேச்சில் பல வரலாற்று உண்மைகள், பல வரலாற்று சம்பவங்களையும் கொண்டு சேர்த்துவிடுவார்..
நாஞ்சில் சம்பத் ஒரு பேட்டியில், 'நான் தவெகவுக்கு வெறும் பேச்சாளராக மட்டுமே போவேன், வயதாகிவிட்டதால் பொறுப்புகளை ஏற்க போவதில்லை என்று கூறியிருந்தார்..
அங்கே ஏற்கனவே விஜய் பின்னால் ஒரு பெரிய இளைஞர் கூட்டம் இருக்கிறது, அவர்கள் ஒரு புதிய ஆட்சி, புதிய ரத்தம், புதிய புரட்சியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.. இது வரவேற்கத்தக்க விஷயம்.
திமுகவின் அறிவுத் திருவிழா
ஜெயலலிதா கார், சீட் தந்ததால், அங்கே ஐக்கியமானார்.. திமுகவை துதி பாடினார்.. பிறகு, வள்ளுவர் கோட்டத்தில் நடந்த திமுகவின் 'அறிவுத் திருவிழாவில்' தன்னை அழைக்கவில்லை என்ற ஆதங்கப்பட்டு பேசினார் நாஞ்சில் சம்பத்.. என்னைவிட குறைவானவர்களை கூப்பிட்டு கவுரவிக்கும்போது, எனக்கு வயதில்லையா? அறிவில்லையா? என்னை ஏன் கூப்பிடவில்லை" என்று வேதனையுடன் கேட்டிருந்தார்.
இதற்கு பிறகுதான், தவெகவுக்கும், விஜய்க்கும் ஆதரவான பேச்சை நாஞ்சில் சம்பத் துவங்கினார்.. மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் அனல் பறக்கும் பேச்சை பேசினார்.. இதனை தொடர்ந்து செங்கோட்டையன் வந்ததை மனமார பாராட்டினார் நாஞ்சில் சம்பத். 50 வருடம் அனுபவமுள்ள செங்கோட்டையனை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் தம்பிகளா என்று கூறியிருந்தார்.
செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் வருகையினால், விஜய் முதலமைச்சராகிவிட முடியாதுதான்.. ஆனால், கட்சிக்கு பலம் கிடைக்கும்..
கூத்தாடி நடிகர்
கூத்தாடி, நடிகர், ட்விட்டரில் கட்சியை நடத்துபவர், பனையூரில் கொடியேற்றியவர், என்றெல்லாம் விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.. ஆனால், கட்சி ஆரம்பித்த 2 வருடங்களிலேயே இத்தனை சீரியர்கள் தவெகவுக்கு வருவது ஒரு பலம்தானே? இப்போதைக்கு கட்சிக்கு ஒரு மூத்த பேச்சாளர் தேவைப்படும் நிலை உள்ளது.. நாஞ்சில் சம்பத் பேச்சால், தவெகவின் கூட்டங்கள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபாசமாக பேசாமல், நையாண்டியுடன் பேசுவார் என தெரிகிறது.. அவருக்கு இலக்கிய அணி அல்லது அமைப்புச் செயலாளர் போன்ற ஏதாவது ஒரு பதவியை விஜய் கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது..
புதுச்சேரி ரோடு ஷோ
அதேபோல புதுச்சேரியில் ரோடு ஷோ கிடையாது என்று கறாராக சொல்லிவிட்டார்கள்.. இனியும் அனுமதி கிடைக்காது.. இதற்கு முக்கிய காரணம், புதுச்சேரிக்கும், தமிழ்நாட்டிற்கும் ஒரே உயர்நீதிமன்றம்தான்..
ஏற்கனவே கரூர் சம்பந்தமான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ரோட் ஷோவுக்கு அனுமதி வழங்க மாட்டார்கள்.. ஒருவேளை அனுமதி வழங்கப்பட்டால், புதுச்சேரி ரசிகர்கள் மட்டுமல்லாமல், பக்கத்தில் உள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அதிக அளவில் திரண்டு விடுவார்கள்.. இது புதுச்சேரி போன்ற சின்ன ஊரில் சிக்கலை தந்துவிடக்கூடும்..
முதல்வர் ரங்கசாமி, ரோட் ஷோவுக்கு பதிலாக, உப்பளம் அல்லது எளிப்பேட்டில் ஒரு பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளுமாறு சொன்னாராம்,... அதற்கான மனுவும் விஜய் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து.. விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாராம்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் விஜய் டிக் அடித்த அந்த பழைய முகம்! திமுக வளர்த்தெடுத்த புள்ளி! யார்? -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார் -
அதிமுகவிலிருந்து வந்த 32 பேருக்கு.. சீட்டு கொடுத்த விஜய்.. இரட்டை இலையை காலி செய்யும் தவெக? -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி












Click it and Unblock the Notifications