பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு..வாகன ஓட்டிகள் கவலை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு
சென்னையில் பெட்ரோல், விலை இன்று லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது ரூ.93.71காசுகளுக்கும் விற்பனையாகிறது
சென்னை: சென்னையில் பெட்ரோல், விலை இன்று லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது ரூ.93.71காசுகளுக்கும் விற்பனையாகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையில் ரூ.2.27 காசுகளும், டீசல் விலையில் ரூ.2.28 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மெதுவாக உயர்ந்தது.
2 நாட்களுக்கு பிறகு.. சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!.

சதமடித்த பெட்ரோல், டீசல் விலை
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா 2வது அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

விலை குறைந்தது எப்படி
தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் கணிசமாக குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது.

பெட்ரோல் டீசல் அதிரடி உயர்வு
இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.102. 91 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.92. 95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் பெட்ரோல், விலை இன்று லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.93.71காசுகளுக்கும் விற்பனையாகிறது.
Recommended Video

லிட்டருக்கு ரூ. 15 வரை உயரலாம்
பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை 136 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதியடைந்திருந்தனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையில் ரூ.2.27 காசுகளும், டீசல் விலையில் ரூ.2.28 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை ரூ. 15 வரை படிப்படியாக உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
-
விமான எரிபொருள் விலை விண்ணை முட்டியது.. கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்!












Click it and Unblock the Notifications