சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்

Google Oneindia Tamil News

சென்னை ; சென்னையில் இருந்தால் மக்கள் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்ததால செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

Recommended Video

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்!

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று மிகப்பெரிய உச்சமாக ஒரே நாளில் 26,465 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசுகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 197 பேர் மரணம் அடைந்தனர் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மிக உச்சத்தை எட்டியுள்ளது.

    கடுமையாக உயர்வு

    கடுமையாக உயர்வு

    சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 6738 பேர் பாதிக்கப்பட்டனர்.இதேபோல் சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.

    14 நாட்கள்

    14 நாட்கள்

    இந்த மோசமான சூழலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மே 24ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள தென்மாவட்ட மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பரனூர் டோல்கேட்

    பரனூர் டோல்கேட்

    சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்திலுமே வாகனங்களின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருந்தது. இன்றும் நாளையும் ஊரடங்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கூட்டம் இன்றும் நாளையும் இன்னமும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    விருப்பம் ஏன்

    விருப்பம் ஏன்

    ஏனெனில் நாளை மறுநாள் முதல் 14 நாட்களுக்கு அரசு, தனியார் பேருந்துகள் இயக்ககத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு போடப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக சொந்த ஊர்களில் இருப்பதை விரும்புகின்றனர். இதன் காரணமாக பயணிகள் கூட்டம் சென்னையில் அலைமோதுகிறது.

    English summary
    tamilnadu full lockdown: many People moving from Chennai to southern districts due to lockdown from may 10 to 24.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X