இருமுடியுடன் வந்த விஜயகாந்த் ரசிகர்கள்! வானில் நிகழ்ந்த அதிசயம்! புல்லரித்து போன ஜாகுவார் தங்கம்
சென்னை: விஜயகாந்த் நினைவு நாளில் அவரது கேப்டன் ஆலயத்தின் மீது கருடன் சுற்றியதாக சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் அவரது நினைவுகளை இன்றைய தினம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விஜயகாந்தின் இரண்டாவது நினைவு தினம் குரு பூஜையாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு நாளையொட்டி அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

அத்துடன் பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் கண்ணீர் மல்க விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி தெலுத்த வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: கேப்டன் புகழ் வாழ்க, இன்று சபரிமலையில் என்ன கூட்டம் இருக்குமோ அது போன்ற கூட்டம் இருமுடி கட்டிக் கொண்டு கேப்டன் கோயிலுக்கு வந்திருக்கிறார்கள்.
மக்கள் யாரும் கேப்டன் மறைந்துவிட்டார் என நினைக்கவில்லை. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் கேப்டன் விஜயகாந்த் வாழ்கிறார். இன்று விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி வீடுகளில் நாங்கள் பூஜை செய்கிறோம் என சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எனக்கு நிறைய பேர் போன் செய்து கூறினார்கள்.
ஆனால் நாங்கள் இங்கு வந்து பார்த்த போது இருமுடி கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். மார்கழி மாதத்தில் மறைந்தவர்கள் தெய்வமாகிவிடுவார்கள் என்பார்கள். அதிலும் விஜயகாந்த் இறந்த போது அவரது உடலை சுற்றி கருடன் பறந்தது. கடந்த ஆண்டு நினைவு தினத்திலும் கருடன் பறந்தது. தற்போதும் கருடன் பறக்கிறது.
அப்படியென்றால் அவர் தெய்வமாக இருக்கிறார் என்று அர்த்தம். அந்த தெய்வத்திற்கு நான் சண்டை பயிற்சி சொல்லிக் கொடுத்தேன் என்பது எனக்கு பெரிய பெருமையாக இருக்கிறது. அந்த தெய்வத்துடன் நாமும் வாழ்ந்தோம் என்பது பெரிய பெருமை! சண்முகபாண்டியன் திரைத்துறையில் கேப்டன் போல் அதிக புகழை பெற வேண்டும் என நான் மனதார வாழ்த்துகிறேன் என ஜாக்குவார் தங்கம் தெரிவித்திருந்தார்.
விஜயகாந்த் மறைந்த போது தீவுத்திடலில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டு அங்கிருந்து இறுதி சடங்கிற்காக கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது இறுதி ஊர்வலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை தாண்டி வந்துக் கொண்டிருந்த போது அவரது உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியை கருடன் 3 முறை வட்டமிட்டது. இது பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன், கட்சி நிர்வாகிகளை புல்லரிக்க வைத்தது. அவர்கள் அந்த கருடனை கைகூப்பி வணங்கினர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று குருபூஜையாக அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு தேமுதிக அழைப்பு விடுத்திருந்தது.
நினைவு தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயம்பேடு தேமுதிக அலுவலக வளாகத்தில் விஜயகாந்தின் நினைவிடம், சமாதி, மார்பளவு சிலை ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சிலைக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி ஆராதனை செய்யப்பட்டது.
விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தினர். பாஜக தலைவர்களான மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல். முருகன், கரு நாகராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எ.வ. வேலு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் நேரில் வந்து மரியாதை செலுத்தினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications