பாஜக கடை “கிளோஸ்”.. கவுதமியும் விலகிட்டாரா? பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கான இடம்! காயத்ரி சுளீர்
சென்னை: பாஜக நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்து இருக்கும் நிலையில், அது குறித்து காயத்ரி ரகுராம் பரபரப்பு கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
ஒரு காலத்தில் பிரபல தமிழ் சினிமா நடிகையாக திகழ்ந்து வந்த கவுதமி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில்கூட அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அவருக்கு பாஜக தலைமை சீட் கொடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தவர் கட்சியை விட்டே விலகுவதாக அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக விரிவான கடிதத்தை எழுதி உள்ள கவுதமி, பாஜக குறித்தும், அதன் நிர்வாகி அழகப்பன் என்பவர் பற்றியும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார். தனக்கு சொந்தமான நிலத்தை 11 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு விற்றுவிட்டு தனக்கு வெறும் 4 கோடி ரூபாயை கொடுத்துவிட்டு 7 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக பாஜக தலைமையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தன்னுடைய கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து, ஏற்கனவே பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், "சிவப்பு கம்பள வரவேற்புக்காக அனைத்து தலைவர்களுக்கும் ஆரத்தி செய்யவும், பூக்களை வீசவும் பெண் பணியாளர்கள் பொம்மைகளாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். இங்கு பாஜகவுக்கு பெண்கள் அதிகாரம். 33% பெண்கள் இடஒதுக்கீட்டை விரைவில் அமல்படுத்த முடியாது. துரதிர்ஷ்டவசமாக, பல ஆண்டுகளாக எங்கள் பாஜக தேசிய / மாநில கட்சிக்காக மற்றும் நாங்கள் பணியாற்றிய தொகுதிக்கு (நம் நாட்டுக்காக) எங்கள் சேவை, அர்ப்பணிப்பு எங்கள் சொந்தக் கட்சியினரால் இழிவாக பார்க்கப்படுகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
கடின உழைப்பாளிகளுக்கு பாஜக கட்சியில் இருக்க தகுதி இல்லை. ரவுடிகள், பண மோசடி செய்பவர்கள், ஜால்ராக்கள், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையாளர்கள், நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள், மனைவியைக் விவாகரத்து செய்பவர்கள், அல்லது மனைவியைக் கொன்றவர்கள், பெண்களை மேலும் கீழும் பார்க்க செய்பவர்கள் மட்டுமே அவர்கள் கட்சி பதவியில் மகிழ்ச்சியுடன் இருக்கையில் அமர்ந்து இருப்பார்கள். வெளியேறியதற்காக கவுதமி அம்மாவை வாழ்த்துகிறேன்.
பல பெண்கள் அதை விரைவில் உணர்ந்து வெளியேறுவார்கள் என்று நம்புகிறேன். சரஸ்வதி பூஜையின் இந்த புனித நாளில், கட்சியில் இருந்து ஒரு பெண் தொண்டர் மற்றும் வலுவான தொழிலாளியை பாஜக இழந்தது. நாசம். பாஜகவின் கடை மூடப்படுகிறது. பனையூரில் அமர்ந்து மதுபான விருந்து வைத்து 420 மேலாளரை மகிழ்விப்பவர்கள், காளான் சாப்பிடுபவர்கள் மற்றும் ஹனிட்ராப் ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே பழையவராக இருந்ர்உதாலும் புதியவராக இருந்தாலும் பதவி பெறுவார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications