"மோட்டார் வாய்" அண்ணாமலையே என்னை அவதூறாக பேசினால்.. நான் எங்கே செல்வது? காயத்ரி ரகுராம் காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மோட்டார் வாய் அண்ணாமலை தொடர்ந்து என்னை அவதூறாக பேசி கொண்டிருந்தார் என பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் பரபரப்பு ட்வீட்டை போட்டுள்ளார். பாஜகவிலிருந்து விலகிய சூர்யா சிவாவின் ஆடியோ குறித்து காயத்ரி பேசியிருந்த நிலையில் அவர் மீது 6 மாத சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காயத்ரி ரகுராம் பாஜகவில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இறுதியாக வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை பிரிவின் தலைவராகவும் இருந்தார்.

இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்ட பலரை அவர் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் திருச்சி சூர்யா சிவா- டெய்சி சரண் ஆகியோர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

டெய்சி

டெய்சி

அதில் டெய்சியின் கேரக்டரையே தவறாக பேசும் வார்த்தைகளை எல்லாம் சூர்யா சிவா பயன்படுத்தியிருந்தார். பாஜக மூத்த நிர்வாகி ஒருவருடன் டெய்சியை சேர்த்து வைத்து பேசினார். மேலும் டெய்சிக்கு கொலை மிரட்டலும் விடுத்திருந்தார். இந்த 9 நிமிட ஆடியோவை கேட்கவே நாராசமாக இருந்தது. இந்த நிலையில் பெண்ணை இப்படி தரக்குறைவாக பேசிய சூர்யா சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயத்ரி ட்வீட் போட்டார்.

புகைந்து கொண்டிருந்த சில பிரச்சினை

புகைந்து கொண்டிருந்த சில பிரச்சினை

இதையடுத்து ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த சில பிரச்சினைகளையும் முன் வைத்து காயத்ரி கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுத்துவிட்டதாக காயத்ரி புகார் தெரிவித்தார்.

துபாயில் ஒரு ஹோட்டல்

துபாயில் ஒரு ஹோட்டல்

இதையடுத்து அண்ணாமலை தன்னை துபாயில் ஒரு ஹோட்டலில் 150 பேர் முன்னிலையில் அவமானப்படுத்தி பேசியிருந்தார் என காயத்ரி குற்றம்சாட்டினார். இதையடுத்து தொடர்ந்து காயத்ரியை அவதூறாக பாஜக நிர்வாகிகள் பேசி வந்தனர். இந்த நிலையில் பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி அறிவித்துள்ளார். தான் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்து பணியாற்ற அழைப்பு

பாஜகவில் இணைந்து பணியாற்ற அழைப்பு

இதற்கு காயத்ரி ரகுராம் பதிலளிக்கையில் பாஜகவில் வந்து இணைந்து பணியாற்றுங்கள் என நான் உங்களை 3 ஆண்டுகளுக்கு முன்பு அழைத்ததாக ஞாபகம். ஆனால் பாஜகவில் இணைய நீங்கள் மறுத்துவிட்டீர்கள். நம்பகத் தன்மை பற்றி பேசுவது அல்லது ட்விட்டர் போராளியாக மட்டும் இருப்பது, பாஜகவின் அடிமட்ட தொண்டராக இருக்க தைரியம் இல்லாத நீங்கள் பேசக் கூடாது. முதலில் உங்கள் மனநிலையை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

மோட்டார் வாய் அண்ணாமலை

மோட்டார் வாய் அண்ணாமலை

பிராமணராக இருந்து கொண்டு என்னை பற்றி எத்தனை முறை அவதூறாக பேசியுள்ளீர்கள், நான் உங்களது பல ட்வீட்களை பார்த்துள்ளேன். இவை எல்லாவற்றையும் விட ஒரு பெண் 150 பேருக்கு மத்தியில் அவமானப்படுத்தப்படும் போது எங்கு போவது? மோட்டார் வாய் அண்ணாமலையே என்னை அவதூறாக பேசும் போது நான் யாரிடம் போய் புகார் செய்வது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+