துபாய் ஹோட்டல் ரகசியம்! ஆணின் “கிசுகிசு”.. பாஜகவுக்கு ரிஸ்க்! அண்ணாமலை பதவியின்றி வரட்டும் - காயத்ரி
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதவி இல்லாமல் வந்து தன்னை எதிர்கொள்ளட்டும் என்றும், துபாய் ஓட்டல் விவகாரம் குறித்து பேசியதற்காக தான் அவதூறு வழக்கு தொடர்ந்தால் பாஜகவை பணயம் வைப்பதாகும் எனவும் அக்கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.
பாஜகவில் நிர்வாகியாக இருந்த திருச்சி சூர்யா சிவா, பாஜக சிறுபாண்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி சரண் ஆகியோர் இடையிலான ஆடியோ விவகாரத்தில் பகிரங்க விமர்சனத்தை முன்வைத்ததை தொடர்ந்து அண்ணாமலையில் 6 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டவர் காயத்ரி ரகுராம்.
அதை தொடர்ந்து பாஜக மாநில நிர்வாகம் மீது அண்ணாமலை மீதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து விமர்சனங்களை காயத்ரி ரகுராம் சுமத்தி வருகிறார். தொடர்ந்து ட்விட்டரிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

துபாய் ஹோட்டல்
கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராம், "முதலில் நான் சென்னை சோமர்செட் ஹோட்டலில் ஒருவரை சந்தித்ததாக தவறான தகவலை சொல்லி என்னை குறிவைத்து விமர்சனங்களை முன்வைத்தார்கள். தற்போது துபாய் ஹோட்டலில் நான் யாரை சந்தித்தேன் என்று கேட்கிறார்கள். அமைதியாகவே நான் இருந்துவிடப் போகிறேன். அண்ணாமலையே இதற்கு பதில் சொல்வார்

குடும்ப பெண்கள்
எனக்கு ஏராளமான அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எனக்கு ஆலோசனைகளை தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பெண்களை பற்றி அண்ணாமலை எதுவும் பேசவில்லை என்பதே அதற்கு காரணம். எனது பெயரை அண்ணாமலை வேறு எங்கும் பயன்படுத்தவில்லை என மக்கள் நினைத்துக் வருகிறார்கள்.

150 பேர் பங்கேற்ற கூட்டம்
ஆனால், என் பெயரை 150 பேர் இருந்த கூட்டத்தில் அவர் தெரிவித்தார். அவ்வாறு ஏன் அண்ணாமலை பேசினார்? எதன் அடிப்படையில் அப்படி அவர் பேசலாம்? என்று நான் அவரிடம் கேட்கபோவது கிடையாது. நான் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், என் சார்பாக எனது மாநில தலைவர் அண்ணாமலை மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்." என என்றார்.

காயத்ரி ரகுராம் பதில்
இந்த நிலையில் ட்விட்டரில் ஒரு நபர், பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராமிடம், துபாய் வீடியோவை வைத்து உங்களை மிரட்டும் அண்ணாமலை மீது நீங்கள் ஏன் அவதூறு வழக்கு தொடரக்கூடாது என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதனை ரீட்வீட் செய்து உள்ள காயத்ரி ரகுராம் தன்னுடைய விளக்கத்தில் வழங்கி இருக்கிறார்.

அவதூறு வழக்கு
அதில், "என் தந்தை உயிருடன் இருந்திருக்க வேண்டும்.. கட்சியின் தலைவராக முழு அதிகாரம் கொண்டு என் குணத்தை மோசமாக பேசினார். நான் அவதூறு வழக்கு தொடர்ந்தால் என் பாஜக கட்சியை பணயம் வைக்கிறேன் ஆனால் இது தவறு பாஜக மீது அல்ல. இது ஒரு பெண்ணின் மீது ஒரு தனி நபர் ஆணின் கடுமையான கிசுகிசு வார்த்தைகள். மக்கள் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

அண்ணாமலை பதவியின்றி எதிர்கொள்ளட்டும்
எனக்கு இல்லை, என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இதை சரி செய்ய முடியும். எந்த தலைவனும் ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசினால் அதை எந்த கடவுளும் ஏற்க மாட்டார்கள் அல்லது எந்த தமிழ்நாட்டு மக்களும் ஏற்க மாட்டார்கள். இடைநீக்கத்துடன் என் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. நான் மீண்டும் போராடுவேன். அவரும் பவர் போஸ்டிங் இல்லாமல் வந்து என்னை எதிர்கொள்ளட்டும்.
-
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications