சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது நீங்கள் பாஜகவின் முதல்வர் வேட்பாளரா?.. நிக்க வேண்டியதுதானே!.. திருமாவை கலாய்த்து சீண்டும் காயத்ரி

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவின் முதல்வர் வேட்பாளராக என்னை நிறுத்த முயற்சி நடந்தது என தனியார் ஊடகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் அளித்த பேட்டியை பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கிண்டல் செய்து ட்விட்டரில் கருத்தை தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் கடந்த சில ஆண்டுகளாக தேர்தல்களில் கூட்டணி வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு வருகிறது.

இந்த நிலையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலிலும் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது.

நாமெல்லாம் விதைகள்.. தாமரை மலரும்.. காயத்ரி ட்வீட்.. நாமெல்லாம் விதைகள்.. தாமரை மலரும்.. காயத்ரி ட்வீட்..

தொல் திருமாவளவன்

தொல் திருமாவளவன்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக என்னை நிறுத்த முயற்சி நடந்தது என தெரிவித்துள்ளார். அதற்கு இவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

4 தொகுதிகளில் வெற்றி

4 தொகுதிகளில் வெற்றி

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் 4 தொகுதிகளில் வென்றது. இந்த நிலையில் திருமாவளவன் கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டி பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார். அவர் போட்டுள்ள ட்வீட்டில் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பில் நீங்கள் ஏன் நிற்கவில்லை?

கிண்டல் ட்வீட்

கிண்டல் ட்வீட்

நீங்கள் நின்றிருந்தால் நாங்கள் ஏற்றுக் கொண்டிருப்போமே!, உங்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம் என கிண்டலாக தெரிவித்துள்ளார். இத்தனை நாட்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கடும் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்தார். இந்து கோயில்கள் குறித்தும் அங்குள்ள சிற்பங்கள் குறித்தும் திருமாவளவன் கடந்த 2019ஆம் ஆண்டு மோசமாக பேசியதாக காயத்ரி ரகுராம் வீடியோ வெளியிட்டு கடுமையாக அவரை விமர்சித்திருந்தார்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் மெரினா கடற்கரைக்கு வந்து அங்கே இந்துக்களை பற்றி தவறாக பேசட்டும் என சவால் விடுத்திருந்தார். இதையடுத்து அவரது வீட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து திருமாவளவனையும் அவரது கட்சியையும் அவதூறாக பேசியதில் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

ஊடக பேட்டி

ஊடக பேட்டி

தனது பேச்சில் தொடர்ந்து விஷத்தை கக்கி வந்த காயத்ரி , தற்போது தனியார் ஊடக பேட்டியில் திருமாவளவன் கட்டுக் கதைகளை சொல்கிறார் என்ற ரீதியில் நீங்கள் வந்தா நாங்கள் அப்படியே கையெடுத்து கும்பிட்டு ஏற்றுக் கொள்வோமாக்கும் என்ற தொனியில் கிண்டலடித்து ட்வீட் போட்டுள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு விசிகவை விட்டுவிட்டு தனது கவனத்தை திமுக பக்கம் திருப்பிய காயத்ரி தற்போது மீண்டும் விசிகவை வம்புக்கு இழுத்துள்ளார்.

English summary
BJP activist Gayathri Raguram "welcomes" Thol Thirumavalavan's interview for a private channel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X