என்ஜிஓவின் ஆதாயத்துக்காக பேசாதீங்க கார்த்தி.. வேளாண் சட்டம் குறித்து என்ன தெரியும்?.. காயத்ரிரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் என்ஜிஓவின் ஆதாயத்திற்காக பொதுமக்களிடம் பொய்யைத் திணிக்காதீர்கள் என கார்த்தியை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் லட்சக்கணக்கானோர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Gayathri Raguram condemns Actor Karthi for his pro statement for Farmers protest

இவர்கள் திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடிகர் கார்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள் பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும் கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர்.

விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும் பங்கு என்ற வகையில் பெண்களும் பெருந்திரளாக பங்கெடுத்து போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது. நாளும் பொழுதும் பாடுபட்டால்தான் வாழ்க்கை என்ற நிலையில் தங்கள் மாடு கழனி மற்றும் பயிர்களை அப்படியப்படியே போட்டுவிட்டு குடும்பத்தாரை பிரிந்து இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலை தூரம் பயணித்து வந்து வீரத்துடன் போராடி வரும் செய்திகள் நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது.

தண்ணீர் பற்றாக்குறை இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் உழவர் சமூகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மிக மோசமாக பாதிப்படையும் என கருதுகிறார்கள்.

தங்கள் மண்ணில் தங்களுக்கு இருக்கும் உரிமையும் தங்கள் விளை பொருட்கள் மீது தங்களுக்கு இருக்கும் சந்தை அதிகாரமும் பெருமுதலாளிகள் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடைமாற்றம் செய்யப்பட்டுவிடும் என்றும், ஆகவே இந்தச் சட்டங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

ஆகவே போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்து அவர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்' என்று கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பாஜகவின் காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கும் கெடுதலை ஏற்படுத்தும் பொய்களை திணிக்கிறீர்கள் என்பதை நான் சவால் விட்டு கூறுகிறேன். உங்கள் என்ஜிஓவின் நலனுக்காக இதை செய்கிறீர்கள். வேளாண் சட்டம் குறித்த உண்மை விவசாயிகளுக்கு தெரியும்.

மத்திய அரசால் அவர்கள் எத்தகைய பலனை பெறுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். வல்லுநர்களுடன் நேருக்கு நேர் ஊடகங்களில் விவாதம் செய்யுங்கள். மக்களை முட்டாள் ஆக்காதீர்கள் என காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+