இவ்வளவு கொடூரனா? பச்சைக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை! ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெம் வீரமணி தொடர்பான வழக்குகளில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் அடிப்படையில் புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அளவில் பிரபலமான கிரானைட் தொழில் அதிபரும் ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணியை சுற்றி தற்போது சர்ச்சை வெடித்து இருக்கிறது. சிறுமிகளை பாலியல் ரீதியாக அவர் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டை எழுந்தது.

Veeramani Chennai Police crime

திமுக ஆட்சியிலேயே இந்த புகார் எழுந்த நிலையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதாவது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் பாலியல் தடுப்பு பிரிவு ஆய்வாளரிடம் ரகசிய புகார் அளிக்கப்பட்டது.

வீரமணி

அடையாளம் தெரியாத நபர் கொடுத்த பென் ட்ரைவில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும், சுமார் 80 வயது மதிக்கத்தக்க நபர் 13 வயது சிறுமியுடன் பாலியல் தொல்லை கொடுத்ததாக காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கி நிலையில் வீடியோவில் இருந்தவர் ஜெம் குழுமத்தின் தலைவரான வீரமணி என்பது தெரிய வந்தது.

பாலியல் வன்கொடுமை

தேனாம்பேட்டை வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தனக்கு தனது கூட்டாளியான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனை அந்த வீட்டில் குடி வைத்துள்ளார் வீரமணி. மேலும் அவர்கள் மூலம் ஏழை சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதுமட்டுமல்லாமல் மேலும் பல தொழிலதிபர்களுக்கும், சில முக்கிய பிரமுகர்களுக்கும் அந்த சிறுமிகளை அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

வீடியோக்கள்

இது தொடர்பாக வீரமணி, சாந்தி, மகேந்திரா சிம்ஹன் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு புகைப்படங்களும் வீடியோக்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டார். மேலும், வீரமணி மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

8 வழக்குகள்

மேலும், வீரமணி தொடர்பாக புகார்கள், ஆவணங்கள், தகவல் தெரிந்தால் 9345319676 செல்போன் எண்ணுக்கு அனுப்பலாம் என சென்னை மாநகர் காவல்துறை கூறியுள்ளது. தற்போது வரை 8 வழக்குகள் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஒரு புகார்

இந்த நிலையில் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புகார் அளித்துள்ளார். ஏற்கனவே 8 வழக்குகள் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதில் சாட்சியாக ஒரு சிறுமி சேர்க்கப்பட்டிருந்தார். விசாரணையின் போது தானும் ஜம் வீரமணியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சிறுமி புகார் அளித்துள்ளார். இதை அடுத்து விசாரணையில் திடீர் திருப்பமாக சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்ஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+