ஜெம் வீரமணி வழக்கு.. பல கோடி ரூபாய் கைமாறியதாக குற்றச்சாட்டு! அருண் ஐபிஎஸ்சிடம் எஸ்ஐடி விசாரணை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணி விவகாரத்தில் ஏடிஜிபி அருண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. பல கோடி ரூபாய் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், சுமார் 80 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு அவர் அளித்த பதிலை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏடிஜிபியாக இருந்த அருண் மற்றும் கோவை போலீஸ் கமிஷனர் கண்ணன், இந்த விவகாரம் தொடர்பாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

Gem Veeramani case SIT questions ADGP Arun IPS for three hours


80 கேள்விகள் கேட்கப்பட்டதாக..

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல தொழில் அதிபரும், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

ஏடிஜிபி அருணிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் பணப் பரிமாற்றம் மற்றும் வழக்கை மூட முயன்றது தொடர்பாக சுமார் 80 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அருண் அளித்த பதில்கள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெம் வீரமணி வழக்கை மூட முயன்ற குற்றச்சாட்டிற்காக அருண் ஐபிஎஸ்சிடம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏடிஜிபியாக இருந்த அருண, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெம் வீரமணி வழக்கு

தமிழகத்தை உலுக்கியுள்ள ஜெம் வீரமணி வழக்கு குறித்து கடந்த 2025 ஆம் ஆண்டே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் அப்போது அதுபற்றி முறையாக விசாரிக்காமல்போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முடித்து வைத்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதில் தற்போது தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று அருண் மற்றும் கோவை போலீஸ் கமிஷனராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

இதே போன்று வீரமணி வழக்கை முன்பு விசாரித்த விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் யாஸ்மின், காவல் ஆய்வாளர்கள் மகேஷ் குமார், ராஜலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணை நடத்தாமல் வழக்கை முடித்து வைத்தது ஏன்? என சம்மனில் கேள்வி எழுப்பியிருந்ததாக கூறப்படுகிறது.

பல கோடி கை மாறியதாக

தொடர்ந்து இந்த வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தான் அருண் மற்றும் கண்ணன் மீது விசாரணை நடத்த கோரி கோரிக்கைகள் வைக்கப்பட்டன. வழக்கை முடித்து வைக்க பல கோடி ரூபாய் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் இருவரும் நேரில் ஆஜராக சிஐடி சம்மன் அனுப்பி இருந்ததாகவும், அதன்பேரில் நேரில் ஆஜரான அருண் மற்றும் கண்ணனிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அருண் மற்றும் கண்ணனிடம் பணப்பரிமாற்றம், வழக்கை மூட முயன்றது தொடர்பாக என சுமார் 80 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு அவர்கள் அளித்த பதிலை எழுத்துப்பூர்வமாக எஸ்.ஐ.டி அதிகாரிகள் பதிவு செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+