ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு.. அடுத்தடுத்து கைதாகும் நபர்கள்.. இன்று சிக்கிய காவலாளி.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது தொடரப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜெம் வீரமணியின் காவலாளி சீனிவாசனை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இரண்டு போக்சோ வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி (84) மீதான வழக்கு குறித்த விவரங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைப்பதாக இருக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய சிறுமிகளுக்கு படிக்க உதவுவதாக சொல்லி வீரமணி இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான்.

Gem Veeramani POCSO Case Gem Veeramani POCSO

பலாத்கார புகார்

இதுவரை சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் சிறுமிகளை அழைத்து வருவது, குற்றச்செயல்களுக்கு உதவுவது, ஆதாரங்களை மறைப்பது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகளின் கல்வி செலவுக்கு உதவுவதாக கூறிய வீரமணி, பின்னர் சிறுமிகளை தனது இல்லம் மற்றும் விருந்தினர் விடுதிக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிலர் தங்களுக்கு 12 முதல் 15 வயது இருந்தபோது இந்தக் கொடுமை நடந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வாக்குமூலங்கள்

இந்த விவகாரத்தை முதலில் சென்னை போலீஸ் விசாரித்து. முதலில் பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண்பதிலும், DVR கருவியில் இருந்து அசல் வீடியோ ஆதாரங்களை மீட்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 2026 பிப்ரவரியில் வழக்கை முடிக்க போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த சிறப்பு போக்சோ நீதிமன்றம், மீண்டும் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் பின்னரே பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்தது.

மேலும் ஒருவர் கைது

இந்த வழக்கில் முதற்கட்டமாக வீரமணி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் சாந்தி, மகேந்திர சிம்மன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். மேலும், சிறுமிகளை காரில் அழைத்து வந்ததாக கூறப்படும் ஓட்டுநர்கள் லாசர், பிரதிபன், பாபு ஆகியோரும், வீடியோ ஆதாரங்களை மறைத்ததாக கூறப்படும் முன்னாள் ஊழியர் கணேசனும் கைது செய்யப்பட்டனர். பண பரிவர்த்தனை மற்றும் தங்கம் வாங்குவதற்கு உதவியதாக கூறப்படும் மேலாளர் சக்திவேலும் கைதானார்.

தற்போது ஒன்பதாவது நபராக காவலாளி சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகள் வீரமணியிடம் அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தெரிந்திருந்தும், அதுகுறித்த தகவலை வெளியே தெரிவிக்காமல் மறைக்க உதவியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

பகீர் சம்பவம்

இந்த வழக்கில் நாளுக்கு நாள் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அனைத்தையும் தொகுத்து அடுத்த வாரத்திற்குள் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தையே அதிர வைத்துள்ள இந்த வழக்கில் ஒவ்வொரு விஷயமும் பேசுபொருளாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+