கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு.. அரசு பணியில் முன்னுரிமை.. எம்பி ரவிக்குமார் முதல்வருக்குக் கடிதம்
சென்னை: கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கும் வகையில், 1986ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கலப்பு திருமணங்கள் செய்து கொண்டவர்களுக்கு அரசுப் பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கும் அரசாணையை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் பிறப்பித்தார்.
இந்த உத்தரவின்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிகளுக்கு நியமனம் செய்யப்படும்போது கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது

ரவிக்குமார் எம்பி கடிதம்
இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளில் கலப்பு திருமணம் செய்து கொண்ட யாருக்கும் அரசுப் பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இந்நிலையில், 1986ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

1986ஆம் ஆண்டு அரசாணை
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்படவேண்டியவர்களின் பட்டியலில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களையும் சேர்த்துத் தமிழ்நாடு அரசு 1986 ஆம் ஆண்டே ஆணையிட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகள்
2006 முதல் - 2011ஆம் ஆண்டுவரை அன்றைய திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் கலப்புத் திருமணம் செய்துகொண்டோர் 287 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாகக் கலப்புத் திருமணம் செய்துகொண்ட எவரும் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவில்லை.

உரிய நடவடிக்கை
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தைக் கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூகநீதியில் அக்கறை கொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட உரிய ஆணையை வழங்கிடுமாறு வேண்டுகிறேன்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications