"க்ளைமேக்ஸ்".. ஓபிஎஸ்ஸை தேடிய அந்த கண்கள்.. உற்றுப்பார்த்த மோடி.. டக்கென திரும்பிய வாசன்.. தமாகா-வா?
ஜிகே வாசனின் தமாகா விரைவில் பாஜகவில் இணையலாம் என்கிறார்கள்
சென்னை: பாஜகவுடன் குறிப்பாக பிரதமர் மோடியின் பிரியத்துக்கும், பாசத்துக்கும் ஆளான 2 தலைவர்கள் பற்றின செய்திகள்தான் தமிழக அரசியல் களத்தை உஷ்ணமாக்கி கொண்டிருக்கிறது.
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. தேசிய கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.. அந்தவகையில், தமிழகத்திலும் தேர்தல் முனைப்புகள் தென்பட துவங்கிவிட்டன.
இதில், அதிமுகவை பொறுத்தவரை, இன்னும் பஞ்சாயத்து முடியவில்லை.. கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது.. தேர்தல் ஆணையமும் இதுகுறித்த இறுதி முடிவை அறிவிக்கவில்லை.

நொந்து நூடுல்ஸ்
அதிமுகவே இன்று 4 அணிகளாக பிரிந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.. இவர்களின் மோதலை பார்த்துவிட்டு நொந்துபோன நிர்வாகிகளும், ஆதரவாளர்களும், பாஜக, திமுக என மாற்று கட்சிகளுக்கு படையெடுத்து கொண்டிருக்கிறார்கள்.. மேலும், தங்கள் தேர்தல் ஆதாயத்துக்காக, ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் வலியுறுத்தி வருகிறது என்றாலும், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காமல் உள்ளார்.. தொடர்ந்து பிடிவாதமாகவும் இருந்து வருகிறார்.. கடந்த வாரம் குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு அழைத்தும்கூட, அந்த அழைப்பை துணிச்சலுடன் மறுத்து தன் பிடிவாதத்தை, மேலிடத்துக்கு மேலும் தெரியப்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.

காவி தலைவர்
இந்த விழாவுக்கு ஓபிஎஸ்ஸும் அழைக்கப்பட்டிருந்தார்.. முழு "காவி தலைவராக" உருவெடுத்த ஓபிஎஸ்ஸை, அன்றைய தினம் காண முடிந்தது.. அப்போது, பாஜக தலைவர் நட்டாவுடன் சில விஷயங்களை ஓபிஎஸ் பேசியதாகவும் தெரிகிறது.. இந்த விழா பற்றின இன்னொரு தகவல்தான் இப்போது கசிந்து வருகிறது.. இந்த பதவியேற்பு விழாவின்போது, முதல் வரிசையில பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்ற மாநில முதல்வர்கள் உட்கார்ந்திருந்தனர். இவர்களுக்கு பின்வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டு, அங்கே ஓபிஎஸ் உட்கார வைக்கப்பட்டிருந்தார். இதை கேள்விப்பட்ட மோடி, ஓபிஎஸ்ஸையும் முதல் வரிசையில் உட்கார வையுங்கள் என்று அதிகாரிகளிடம் சொன்னாராம்.

ஜிகே வாசன்
அதற்கு பிறகுதான், ஓபிஎஸ்ஸை முன்வரிசையில் அழைத்து வந்து உட்கார வைத்துள்ளனர்.. விழா முடிந்ததுமே, பிரதமரை வழியனுப்ப, மற்ற மாநில முதல்வர்கள் எல்லாரும் வரிசையில் நின்றிருந்தபோது, அந்த வரிசையில் நம் ஜிகே வாசனும் நின்றிருந்தாராம்.. அப்போதும் ஓபிஎஸ் எங்கே என்று மோடி கேட்க, வாசன் பின்னாடி திரும்பி பார்த்திருக்கார்.. பிரதமர் மறுபடியும் நம்மை தேடுவதை அறிந்த ஓபிஎஸ், வேகவேகமாக அவரே முன்வந்து பிரதமரிடம் நின்றிருக்கிறார்.. அப்போது ஓபிஎஸ்ஸை நலம் விசாரித்துவிட்டு, பிரதமர் கிளம்பி சென்றுவிட்டாராம்.. இந்த இரு நிகழ்வுகளும் ஓபிஎஸ்ஸை குஷியில் ஆழ்த்தி வருகிறதாம்.

மூப்பனார்
எடப்பாடி பழனிசாமிக்கு 95 சதவீத நிர்வாகிகள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது மேலிட தலைவர்களுக்கு தெரியும்.. எடப்பாடி பழனிசாமியிடம்தான் தற்சமயம் பெரும்பாலான கட்சி, கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் மேலிட தலைவர்களுக்கு தெரியும்.. எவ்வளவுதான், தனக்கு சிக்கல்கள், நெருக்கடிகள் இருந்தாலும், திமுக எதிர்ப்பு என்ற விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதுணையுடன் இருந்து வருகிறார் என்பதும் மேலிட தலைவர்களுக்கு தெரியும்.. ஒற்றை தலைமை விவகாரத்தை ஏற்காமல், பிடிவாதமாக ஏற்காமல், பாஜகவை எதிர்க்கவும், தவிர்க்கவும் எடப்பாடி துணிந்துவிட்டார் என்பதும் மேலிட தலைவர்களுக்கு தெரியும்.. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு இல்லாமல், பாஜகவால் தமிழகத்தில் களம் காண முடியாது என்பதும் மேலிட தலைவர்களுக்கு தெரியும்.

வாசன் வாசன்
இவ்வளவு இருந்தும், நிர்வாகிகள் ஆதரவை அவ்வளவாக பெறாத ஓபிஎஸ்ஸை ஏன் இன்னமும் மேலிட தலைவர்கள் விடாமல் வைத்துள்ளனர், அதிமுக விவகாரத்தில் என்னதான் முடிவில் உள்ளனர் என்பதெல்லாம் தெரியாமல் தொண்டர்கள் குழம்பி போயுள்ளனராம்.. மேற்கண்ட குஜராத் நிகழ்வு என்றில்லாமல், ஜிகே வாசனிடம் பிரதமர் எப்போதுமே அன்பாக பழகுவார்.. வாசனை பொருத்தவரை மிகவும் மென்மையானவர்.. பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்... யாரையும் அநாகரீகமாக பேசாதவர்.. மூப்பனாரின் வளர்ப்பு அப்படி..!

டீசன்ட் டிமாண்ட்
தேர்தல் காலங்களில், எப்போதுமே கூட்டணி கட்சி தலைவர்களிடம் இவர் டிமாண்ட் செய்ததே கிடையாது.. கூட்டணி தலைமைக்கு எந்தவிதமான நெருக்கடியும் தர மாட்டார்.. அதனாலேயே தனிப்பட்ட மரியாதை எல்லா கட்சியினரிடமும் இவருக்கு இன்றுவரை இருக்கிறது. பிரதமர் மோடியின் அபிமானத்தை பெற்றிருந்தாலும், தனக்கான பதவி, பொறுப்பு வேண்டும் என்று வாசன் இதுவரை நிர்ப்பந்தித்தது கிடையாது. ஆனால், சில கணிப்புகள் அரசியல் களத்தில் எழுந்தன.. ஒருவேளை வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படுமா? அல்லது தமாகாவை கலைத்துவிட்டு, கூண்டோடு பாஜக பக்கம் சாய போகிறாரா என்றெல்லாம் சலசலக்கப்பட்டது..

கூண்டோடு காலி
அப்படி எதுவுமே நடக்கவில்லை..இன்றுவரை வாசன் மீதான மரியாதையும் அப்படியேதான் தலைவர்களுக்கு இருக்கிறது என்றாலும், வரும் தேர்தலில் பாஜகவுடன் தமாகா போடும் கூட்டணி கணக்கும், மிகப்பெரிய எதிர்பார்ப்பை இங்கு ஏற்படுத்தி வருகிறது.. தமாகாவை கலைத்துவிட்டு பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கக்கூடும் என்று இந்த முறையும் சிலர் கிளப்பி விட்டு வருகிறார்கள்.. வாசன் விஷயத்தில் பாஜக என்ன செய்ய போகிறது? வாசன் என்ன செய்ய போகிறார்?.. பார்ப்போம்..!!!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications