Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க நகைக்கடனை வாங்க முண்டியடிக்கும் இந்தியர்கள்.. தங்கத்தின் பின்னே ஓடும் வங்கி! ஆர்பிஐ சொல்வதென்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய காலகட்டத்தில் சாமானிய மக்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை தங்களின் அவசர பணத்தேவைக்காக வங்கிகளை நாடும் நிலை அதிகரித்துள்ளது.. குறிப்பாக தனிநபர் கடன் மற்றும் கார் கடன்களை வாங்குவதை விட தங்க நகைக்கடன்களை பெறுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..

ஒரு காலத்தில் அவமானமாக பார்க்கப்பட்ட அடகு வைக்கும் பழக்கம் இன்று புத்திசாலித்தனமான நிதி மேலாண்மையாக மாறி வருவது ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது..

Gold Loan RBI Data 2026 Personal Loan

தங்க நகைக்கடன்கள்

ஆம், கடந்த ஜனவரி மாத கணக்கீட்டின்படி தங்க நகைக்கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு 128 சதவீதம் என்ற இமாலய வளர்ச்சியை எட்டியுள்ளன.. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 91 சதவீதமாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

தங்க நகைக்கடன் இவ்வளவு வேகமாக வளர மிக முக்கிய காரணம் அதன் எளிமை மற்றும் குறைந்த வட்டி விகிதமே ஆகும்.. மற்ற கடன்களை போல அதிக ஆவணங்களோ அல்லது நீண்ட காத்திருப்பு காலமோ இதற்கு தேவையில்லை என்பதால் மக்கள் இதை அதிகம் நாடுகின்றனர்..

சூரிய ஒளி மின்சாரம்

நகைக்கடன்களுக்கு அடுத்தபடியாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கான கடன்கள் 62 சதவீதம் அளவுக்கு வளர்ந்துள்ளன.. அதாவது சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்று ஆலைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களுக்கு வங்கிகள் அதிக முன்னுரிமை அளிக்கின்றன..

ஆனால் அதே சமயம் வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் ஏற்றுமதி கடன் மட்டும் 17.2 சதவீதம் குறைந்துள்ளதை காண முடிகிறது.. இதற்கு உலக சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களும் அமெரிக்க வர்த்தக கொள்கைகளில் ஏற்பட்ட குழப்பங்களுமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது..


சில்லறை கடன்கள்

சில்லறை கடன்கள் என்று அழைக்கப்படும் தனிநபர் மற்றும் வீட்டு உபயோக கடன்களும் கடந்த ஆண்டை விட 15 சதவீதம் உயர்ந்துள்ளன.. இதில் மாணவர்களுக்கான கல்விக்கடன் மட்டும் சற்று மெதுவான வளர்ச்சியை கண்டுள்ளது.. அதாவது கடந்த ஆண்டு 16 சதவீதமாக இருந்த கல்விக்கடன் வளர்ச்சி இந்த ஆண்டு 14 சதவீதமாக குறைந்துள்ளது..

தொழில்துறையை எடுத்துக்கொண்டால் ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் தயாரிப்பு துறைகள் 36 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன.. ஒட்டுமொத்தமாக வங்கிகள் வழங்கும் கடன்களின் அளவு அதிகரித்து வந்தாலும் மக்களிடம் இருந்து வங்கிகளுக்கு வரும் வைப்புத்தொகை எனப்படும் டெபாசிட் வரத்து சற்று குறைந்துள்ளதே தற்போதைய கவலைக்குரிய விஷயமாக உள்ளது..

வைப்புத்தொகை

பிப்ரவரி மாத தரவுகளின்படி வங்கிகள் வழங்கும் கடன்கள் 13.6 சதவீதம் வளர்ந்த நிலையில் வைப்புத்தொகை வெறும் 11.2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.. இதனால் வங்கிகளில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் சேமிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பது ஒரு இடைவெளியை உருவாக்கியுள்ளது..

கடன்-வைப்பு விகிதம் என்பது 82.47 சதவீதமாக உயர்ந்துள்ளது.. அதாவது வங்கிகள் தங்களிடம் உள்ள ஒவ்வொரு 100 ரூபாயிலும் சுமார் 82 ரூபாயை கடனாக கொடுத்து வருகின்றன..

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு கார் கடன் போன்ற சொத்து கடன்களை விட கையில் இருக்கும் தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுவதையே பாதுகாப்பானதாக கருதுகின்றனர் என்பது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது..

"கடந்த ஆண்டு மொத்த சில்லறை கடன்களில் சுமார் 3 சதவீதமாக இருந்த தங்க நகைக்கடன்களின் பங்கு, இந்த ஆண்டு இரட்டிப்பாக உயர்ந்து 6 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதும் ரிசர்வ் வங்கி தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+