கிராமுக்கு தங்கம் இவ்ளோ ஏறிடுச்சே.. மறுநாளே தங்கத்தின் விலை உயர்வு.. இன்று வெள்ளி விலையையும் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில், மறுநாளே இன்று சர்ரென எகிறிவிட்டது.. இது நகைப்பிரியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்து வருகிறது.. இன்று தங்கம், வெள்ளி விலையை பாருங்க.

நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1320 குறைந்தது.. திடீரென இப்படியொரு விலை குறைவு, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை தந்து திக்குமுக்காட வைத்துவிட்டது..

gold rate gold

காரணம், இந்த வருடம் ஆரம்பத்திலிருந்தே தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போனது.. பிறகு, கடந்த 2ம் தேதிதான், ஓரளவு தங்கம் குறைந்தது.. சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.58,960 ஆக விற்கப்பட்டது..

பிறகு 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. மறுநாள் 4ம் தேதியன்றும், ஒரு சவரன் ரூ.58,960க்கு விற்கப்பட்டது. 5ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,840க்கும் விற்கப்பட்டது.

விலை உயர்வு: பிறகு நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை திடீரென கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,365க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.58,920க்கும் விற்கப்பட்டது. இதே விலை தொடரும் என்று பலரும் நினைத்து கொண்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை சல்லென சரிந்துவிட்டது.

நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.7200க்கும், சவரனுக்கு ரூ.1320 குறைந்து ஒரு சவரன் ரூ.57,600க்கும் விற்கப்பட்டது. இதனால் வழக்கத்தைவிட நேற்றைய தினம், நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதேநிலை நீடிக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், இன்று தங்கம் விலை உயர்ந்துவிட்டது.. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைவு: தங்கம் விலை கிகிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.103-க்விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் தங்கம் விலை குறைந்ததையடுத்து, சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி சொல்லும்போது, "அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதனால் தொழில் துறையில், முதலீட்டாளர்களால் அதிக முதலீடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இன்னும் சில தினங்களுக்கு தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஏமாற்றம்: அதுமட்டுமல்ல, கடந்த சில மாதங்களாக சரிந்திருந்த பங்கு சந்தையானது மீண்டும் உயர வாய்ப்பு உள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை குறைத்து பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம்.. அதனால்தான், தங்கத்தின் விலை குறைந்துவிட்டதாக சந்தை வல்லுநர்கள் கருத்து கூறியிருந்தனர்.

ஆனால், அனைத்து தரப்பினரின் கணிப்புகளுமே, எதிர்பார்ப்புகளுமே இன்று பொய்யாகிவிட்டது. நேற்று தங்கம் குறைந்த நிலையில், மறுநாளே விலை கூடியிருப்பது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம் இதுதான்:

03-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960
04-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960
05-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,840
06-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,920
07-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+