"பிளான் பி.." தங்கம் விலை கிராமுக்கு ரூ.1500 சரியும்? பெரிய மேட்டரை போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம் இறக்கம் என மாறி மாறி இருந்து வருகிறது. இதனால் வரும் காலத்தில் தங்கம் விலை எப்படிச் செல்லும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை இப்போது ஏன் இப்படி இருக்கிறது.. வரும் காலங்களில் அது எந்தளவுக்குக் குறைய வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் என்ன சொல்லியிருக்கிறார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
தங்கம் விலை கடந்த மாதப் பிற்பகுதியில் கணிசமாகவே குறைந்தது. சமீபத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90,000க்கு கீழ் கூட போனது. இப்போதும் கூட தங்கம் விலை கிட்டத்தட்ட அதே ரேஞ்சில் தான் இருக்கிறது. ஒரு நாள் சரிவு, ஒரு நாள் ஏற்றம் என மாறி மாறியே தான் இருக்கிறது.
இதற்கிடையே இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ.880 தங்கம் விலை மாலையில் மீண்டும் ரூ.560 உயர்ந்தது. இப்போது ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.11,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.91,840க்கு விற்பனையாகிறது. இதனால் வரும் காலங்களில் தங்கம் விலை எப்படிச் செல்லும் என்பதில் குழப்பம் இருக்கிறது.

ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவில் வரி விவகாரம் எப்படிச் செல்லும்.. ஏஐ பப்பிள் எப்படி என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பது தொடர்பாக அவர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் வீடியோவில், "தங்கம் விலையில் லேசான ஏற்ற இறக்கம் தொடர்கிறது.. வெள்ளி விலையும் கூட அதே இடத்தில் தான் இருக்கிறது.. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் போய் இருக்கிறது.. அதேநேரம் வெள்ளி விலையில் வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்குமான வித்தியாசம் மிக அதிகமாக இருக்கிறது. இது எவ்வளவு நாள் தொடரும் என நமக்குத் தெரியாது. இதுதான் மார்க்கெட் நிலவரம்.
பிளான் பி
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு உச்ச நீதிமன்றம் டிரம்ப்பின் வரி செல்லுமா செல்லாதா என்பது குறித்து விசாரித்து வருகிறது. ஆனால், டிரம்ப் என்னிடம் பிளான் பி இருக்கிறது எனச் சொல்கிறார்... இந்த வரி நிலைக்கவில்லை என்றாலும் வேறு பிளான் இருக்கிறது என்கிறார். எனவே, இந்த வர்த்தக வரி எப்படிப் போகும் என யாருக்கும் தெரியவில்லை. எனக்கும் தெரியாது.
வரியைப் பற்றி எல்லாரும் இப்போது எல்லாரும் சும்மா அடித்து விடுகிறார்கள். அவர்கள் சொன்னது சரியாகப் போனது என்றால் ஜீனியஸ் என சொல்வார்கள். அதேநேரம் தப்பாகிவிட்டது என்றால் முட்டாள் என்பார்கள். அங்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது என்பதால் எப்படி வேண்டுமானாலும் போகலாம். அங்கு டிரம்ப்பின் குடியரசுக் கட்சி ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட நீதிபதிகள் தான் 6 பேர் இருக்கிறார்கள். இதனால் இந்த மேட்டரில் என்ன நடக்கும் என்பதைத் தீர்ப்பு வரும் வரை சொல்ல முடியாது. எனவே, அதை வைத்து முதலீட்டு முடிவுகளும் எடுக்கக்கூடாது.
கிராமுக்கு ரூ.2000 சரிவு?
மறுபுறம் ஏஐ பப்பிள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது ஷேல் நிறுவனம் மூலம் கடன் வாங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். இதெல்லாமே ஒரு எச்சரிக்கை மணி தான். அமெரிக்கா ரொம்ப நாட்களாகப் பொருளாதார மந்தநிலையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதேநேரம் இவை எல்லாம் எப்போது வெடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
எனவே, தற்போதைய சூழலில் தங்கம் விலை நல்ல நிலையிலேயே இருக்கிறது. எனவே, தங்கம் விலை பெரியளவில் குறையாது. அதாவது கிராமுக்கு 1500 முதல் 2000 வரை சரிவது கஷ்டம். அப்படித் தங்கம் விலை சரிந்தால் மற்ற எல்லாச் சொத்துகளும் கூட விழும். அதுதான் இப்போது நிலைமையாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications