தங்க மார்கெட்டில் வெடிக்க போகும் பூகம்பம்.. ஏதோ பெருசா நடக்குதாம்! வல்லுநர் கொடுத்த மேஜர் வார்னிங்
சென்னை: உலகெங்கும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், விலை உச்சத்திற்குப் போய்விட்டதால் மக்கள் ஒருமுறைக்கு இரு முறை யோசிக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் 10%க்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், இது தொடர்பாகப் பொருளாதார நிபுணர் பீட்டர் ஷிஃப் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. டிரம்ப் வந்த பிறகு, எகிற ஆரம்பித்த தங்கம் விலை அதன் பிறகு குறையவே இல்லை. தங்கம் விலை குறையும் சூழல் ஏற்படும்போதெல்லாம் டிரம்ப் எதாவது தடாலடியாக அறிவித்துப் பரபரப்பைக் கிளப்புவார். இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.

ஏதோ பெருசா நடக்குது
தங்கம் தற்போது வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இந்த திடீர் விலை உயர்வு என்பது ஒரு பெரிய சந்தை மாற்றத்தின் அறிகுறி என்று பிரபல பொருளாதார நிபுணர் பீட்டர் ஷிஃப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக யூரோ பசிபிக் அசெட் மேனேஜ்மென்ட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் பீட்டர் ஷிஃப் தனது ட்விட்டரில், "இது மிகவும் தீவிரமடைந்து வருகிறது. தங்கம் ஒரு அவுன்ஸ் 4,350 டாலரை தாண்டிவிட்டது. இது சீக்கிரமே 4,400 டாலரை எட்டலாம். கடந்த ஒரே வாரத்திற்குள் 10% அதிகரித்துள்ளது. ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்பதையே இது காட்டுகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று திங்கள்கிழமை மாலை சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்திருந்தது. சர்வதேச சந்தையில் அதன் விலை 4300 டாலரை தாண்டிவிட்டது. இந்த ஏற்றம் இந்தியா உட்பட உலகெங்கும் எதிரொலிக்கும். அதன்படி பார்க்கும்போது இந்தியாவிலும் இன்றைய தினம் தங்கம் விலை உயரவே போகிறது.
தங்கம் உச்சம்
இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை, தங்கம் கிட்டத்தட்ட 70% வருமானத்தை அளித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 8% மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால், தங்கம் விலை அதைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு 70%க்கு மேல் உயர்ந்துள்ளது. குறிப்பாகக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் 10% அதிகரித்துள்ளது.
தங்கம் விலை இந்தளவுக்கு உயர இரு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலில் அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் பதற்றம் இன்னும் சீராகவில்லை. சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக டிரம்ப் சொன்னாலும் கூட அது குறித்து கூடுதலாக எந்தவொரு தகவலும் இல்லை. மேலும், இந்தாண்டு இறுதியில் அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம் நடக்கும் நிலையில், அதில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். அப்படி வட்டி விகிதம் குறைக்கப்படும் போதும் தங்கம் விலை உயரும். இதுபோல சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முதலீடு இருக்காது
தங்கத்தை பொறுத்தவரை மேற்குலக நாடுகளில் பெரிதாக அதில் முதலீடு செய்ய மாட்டார்கள். தங்கத்தில் இருந்து பணம் (free cash flow) வராது. அது வட்டியையும் கொடுக்காது. லாபம் குறைவு என்பதால் அங்கு வல்லுநர்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய மாட்டார்கள். இருப்பினும், இதனை உலக தங்க கவுன்சிலின் பிராந்திய தலைமைச் செயல் அதிகாரி சச்சின் ஜெயின் ஏற்க மறுக்கிறார்.
லாபம் இருக்காதா!
இது தொடர்பாக சச்சின் ஜெயின் மேலும் கூறுகையில், "தங்கம் காலம்காலமாக நிலைத்து நிற்கிறது. அது ஒரு பாதுகாப்பு கவசம் போலவே செயல்பட்டுள்ளது. இது வெறும் செயலற்ற சொத்து மட்டுமல்ல, நிச்சயமற்ற காலங்களில் அபரிமிதமான லாபத்தை அளித்த ஒரு சொத்தாக இருந்து வருகிறது" என்றார். இப்படி வல்லுநர்கள் அனைவரும் தங்கத்தின் மீதான தங்கள் பாயிண்ட்டை மாற்றுகிறார்கள். இப்படி வல்லுநர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் தங்கம் விலையில் ஒரு பெரிய மாற்றம் நடக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications